அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
முயல் - ஆமை பந்தயம் -
நமக்கு சொல்லித்தரும் பாடம்
A LIFE LESSON FROM HARE AND TORTOISE
மதுரை கங்காதரன்
முயல் - ஆமை பந்தயம் -
நமக்கு சொல்லித்தரும் பாடம்
A LIFE LESSON FROM HARE AND TORTOISE
முயலுக்கும் , ஆமைக்கும் இடையே நடந்த பந்தயம் உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். இதில் என்ன பிரமாதம். அந்த பந்தயத்தில் ஆமை ஜெயித்தது. முயல் தோற்றது! இது தெரிந்தது தானே! ஆனால் எதற்காக வேகமாக ஓடும் முயலையும், மெதுவாக நடக்கும் ஆமைக்கும் பந்தயம் வந்தது. ஏன் ? வேகமாக ஓடும் சிறுத்தைக்கும் , மெதுவாக ஊரும் நத்தைக்கும் பந்தயம் வரவில்லை. மேலும் ஏன் முயல் தோற்றுப் போகும்படி சித்தரித்தார்கள். அதற்கு வலுவான காரணம் என்ன? இதற்கெல்லாம் விடை இதோ!
அதாவது முயல் தோற்றது 'இயலாமையால்' அல்ல. அது முயலாமையால் தோற்றது. அதை பிரித்து பார்த்தால் முயல் + ஆமை = முயலாமை. அதாவது முயற்சி செய்யாமை. தன்னுடைய ஓட்டத்தின் முன்னால் இந்த ஆமை ஜெயிக்கமுடியுமா என்கிற இறுமாப்பு! தலைக்கணம்! தொடர் முயற்சி இன்மையால் தனது அலட்சிய போக்கால் வெற்றியை இழந்தது. ஆமையோ தன்னால் மெதுவாகத்த்தான் நடக்க முடியும், கட்டாயம் தான் முயலிடம் தோற்று விடுவோம் என்று தெரிந்தும் தைரியமாக முயலிடம் பந்தயத்திற்கு போனது. ஏனென்றால் அதனிடம் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக்கின்ற தைரியத்தினால். தான் மெதுவாக நடந்தாலும் தன்னுடைய தொடர் முயற்சியால் முயன்று வெற்றி பெற்றது. ஆகவே நீங்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதீர்கள். உங்களிடம் உள்ள தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை மட்டும் இழக்காதீர்கள்.
ஆனால் உண்மையான போட்டி உலகில் முயலுக்கும் , ஆமைக்குமா பந்தயம் நடக்கிறது. அதாவது சைக்கிளுக்கும் , மோட்டார் காருக்குமா போட்டி நடக்கிறது. மோட்டாருக்கும் , மோட்டாருக்குமல்லவா போட்டி நடக்கிறது. அதாவது முயலுக்கும், முயலுக்குமல்லவா போட்டி நடந்திருக்க வேண்டும்.
அதாவது பள்ளி வகுப்பில் முதல் மாணவனாக வரும் பலர், மாவட்ட அளவில் முதலாவதாகவா வருகிறார்கள்? அவர்கள் மாநில அளவில் எங்கேயோ இருப்பார்கள். அவ்வளவு கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. அதாவது முதலாவதாக வருவதற்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது தான் இந்த பந்தயம் சொல்லும் பாடம்.
பாடம் : 1
முயல் எவ்வளவு வேகமாக ஓடினாலும் தன்னுடைய தொடர் ஓட்டம் , இடைநில்லா ஓட்டம் இல்லாததால் சாதாரண ஒரு ஆமையிடம் தோற்றது. அதனால் ஆமை தான் எப்போதும் ஜெயிக்கும் என்பது கிடையாது. போட்டியின் போது எப்போதும் விழிப்புடன் இரு. தொடர் முயற்சியை விட்டுவிடாதே.
பாடம் : 2
தம்மை விட தகுதி குறைந்தர்வர்களிடம் போட்டியிடும்போது அலட்சியமாக நடந்து கொள்ளக்கூடாது.
பாடம் ; 3
போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை எப்போதும் தொடர் முன்னேற்றம் இருக்க வேண்டும். இடையில் தொய்வு எற்பட்டாலோ அல்லது ஓய்வு எடுத்துக்கொண்டாலோ தோல்வி உறுதி. அதாவது வெற்றி இலக்கை நெருங்க நெருங்க மிக வேகமாக முன்னேற வேண்டும்.
ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரர்கள் வெற்றி இலக்கை நெருங்க நெருங்க மிக வேகமாக ஓடித் தொடுவதை பார்த்திருப்பீர்கள். அதன் அர்த்தம், வேகமாக ஓடிவந்து இலக்கை நெருங்கும்போது வேகம் குறைத்துக்கொண்டால் , இதற்கு முன் பாடுபட்டது வீணாகிவிடும் என்கிற காரணம் தான்.
பாடம்: 4
வாழ்கையில் உங்களிடம் போட்டிபோடுபவர்கள் உங்களைவிட அதிக மடங்கு திறமை உள்ளவர்கள் இருப்பார்கள் என்று கருதி அதற்குத் தகுந்தாற்ப்போல் உங்கள் திறமையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பாடம் : 5
யார் போட்டுக்கு வந்தாலும் உங்கள் தொடர் முன்னேற்றம், கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை எப்போதும் கைவிடக் கூடாது.
பாடம் : 6
இயலாமையால் முயலாமையை வேண்டாம். ஆமை போன்ற சோம்பேறிதனத்தை விரட்டி வாழ்கையில் முயல்...முயல்...முயல்.. முயலைப்போன்று வேகமாக முன்னேறு.
கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
அதாவது பள்ளி வகுப்பில் முதல் மாணவனாக வரும் பலர், மாவட்ட அளவில் முதலாவதாகவா வருகிறார்கள்? அவர்கள் மாநில அளவில் எங்கேயோ இருப்பார்கள். அவ்வளவு கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது. அதாவது முதலாவதாக வருவதற்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது தான் இந்த பந்தயம் சொல்லும் பாடம்.
பாடம் : 1
முயல் எவ்வளவு வேகமாக ஓடினாலும் தன்னுடைய தொடர் ஓட்டம் , இடைநில்லா ஓட்டம் இல்லாததால் சாதாரண ஒரு ஆமையிடம் தோற்றது. அதனால் ஆமை தான் எப்போதும் ஜெயிக்கும் என்பது கிடையாது. போட்டியின் போது எப்போதும் விழிப்புடன் இரு. தொடர் முயற்சியை விட்டுவிடாதே.
பாடம் : 2
தம்மை விட தகுதி குறைந்தர்வர்களிடம் போட்டியிடும்போது அலட்சியமாக நடந்து கொள்ளக்கூடாது.
பாடம் ; 3
போட்டியின் ஆரம்பம் முதல் முடிவு வரை எப்போதும் தொடர் முன்னேற்றம் இருக்க வேண்டும். இடையில் தொய்வு எற்பட்டாலோ அல்லது ஓய்வு எடுத்துக்கொண்டாலோ தோல்வி உறுதி. அதாவது வெற்றி இலக்கை நெருங்க நெருங்க மிக வேகமாக முன்னேற வேண்டும்.
பாடம்: 4
வாழ்கையில் உங்களிடம் போட்டிபோடுபவர்கள் உங்களைவிட அதிக மடங்கு திறமை உள்ளவர்கள் இருப்பார்கள் என்று கருதி அதற்குத் தகுந்தாற்ப்போல் உங்கள் திறமையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பாடம் : 5
யார் போட்டுக்கு வந்தாலும் உங்கள் தொடர் முன்னேற்றம், கடின உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை எப்போதும் கைவிடக் கூடாது.
பாடம் : 6
இயலாமையால் முயலாமையை வேண்டாம். ஆமை போன்ற சோம்பேறிதனத்தை விரட்டி வாழ்கையில் முயல்...முயல்...முயல்.. முயலைப்போன்று வேகமாக முன்னேறு.
உன்னிடத்தில் பெரிய அளவில் திறமையும் , முயற்சியும், அறிவும் இருந்தாலும் உனது கவனம் முழுவதும் உனக்கு முன்னே , பின்னே இருக்கும் போட்டியாளர்களை விழிப்புடன் கவனித்து தொடர் முன்னேற்றம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் உனக்கு வெற்றி கிடைக்கும்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Good explanation and best learning points.
ReplyDelete