உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை  
பாகம்: 25 உள்விதி மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-
DON'T FORGET INNER MAN AND AVOID PROBLEM
என் அன்பிற்குப் பாத்திரமான மனிதா! இந்த உள்விதி மனிதனின் படைப்-பாற்றலைப் பற்றி என்ன நினைக்கின்றாய்? இப்போது நீ பார்த்துக் கொண்டிருக்- கின்றாயே கோடிக்கணக்கான ஜீவராசிகள், விதவிதமான வண்ணங்களின் படைப்புகள், ஒரு செல் உயிரினம் முதல் ராட்சச டைனோசர் (இப்போது இல்லை), இப்போது இருக்கும்திமிங்கிலம், ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம், நீரில் வாழ்வான, ஊர்வன, பறப்பன,  நிலத்தில் வாழ்வான, புல் , பூண்டு மரம் செடி, கொடி, பாக்டீரியா, வைரஸ் இன்னும்  மனிதன் கண்டுபிடிக்காத உயிரினங்கள் எல்லாமே எனது படைப்பாற்றலால் வந்தவை.  இவைகள் உனக்காக எனது பல ஆண்டு அனுபவத்தால் பார்த்துப் பார்த்து    படைக்கப்பட்டவை. 
என் இனிய மனிதா! உன்னிடத்தில் 'நான் ' என்னும் அகம்பாவம் மற்றும் உலகில் உள்ள அனைத்தையும் அடையத் துடிக்கும் பேராசை காரணமாக எனது படைப்பாற்றலின்  மகிமையை உனது கண்கள் மறைக்கின்றது. நன்மையான எண்ணங்கள் பல தந்தும் நீ  தீய எண்ணங்களை நினைகின்றாய். அதனால் எனது படைப்பாற்றலின் நன்மைகள்  உனக்கு முழுமையாக கிடைபதில்லை. அதற்காக இனிமேல் நான் படைக்க விரும்பும் செயல்கள் அனைத்தும் உன் மூலமாகப் படைத்திட  நினைக்கிறேன். அதனால் இந்த உலகம் நன்மைகளைக் கொண்டிருக்கும் நல்ல, புது   உலகமாக மாறட்டும். 
பாசமுள்ள மனிதா! நீ இது நாள் வரை அறிந்திருப்பதை, அறியவிரும்புவதை, அறிய வேண்டியதை இந்த உள்விதி மனிதன் மூலமாக உனக்குத் தந்து அதன்மூலம் பல  சாதனைகள் இந்த உலகில் நிகழ்த்த உனக்குத் துணைபுரிய வந்துள்ளேன். இனி உனது  எண்ணங்கள் அனைத்தும் ஏறு முகம் தான்! நன்மை வழியில் செல்லும் நல்ல முகம் தான். எல்லா மனங்களை ஆட்கொள்ளும் ஆசைமுகம்தான். எல்லாப் பண்புகளைவெளிப்படுத்தும் அன்புமுகம் தான்.
மதிப்புமிக்க மனிதா! எனது எண்ணங்கள் கரடு முரடானவையோ  அல்லது மிகவும் கஷ்டமானதோ அல்ல. அவைகள் மிகவும் எளிமையாகவும் எப்போதும் உண்மையாகவும் இருக்கும். அதை பின்பற்றுவது மிகவும் எளிது. 
பிரியமுள்ள மனிதா! இன்னது இதற்காக! என்று தெளிவாக புரிந்து கொள்ளாமல்  மற்றவர்களுக்குப் புரியாத மற்றும் தெரியாத மொழிகளில் உள்ள பாடல்கள்,  ஸ்லோகங்கள், மந்திரங்கள், உபநிடங்கள், சொற்பொழிவுகள் போன்றவைகளைக்  கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து பலரின் முன்னால் அனைத்தும் தெரிந்த அறிவாளி  போல் பேசுவதால், பாடுவதால், படிப்பதால் கேட்பவருக்கு என்ன லாபம் கிடைக்கும்? அப்போதைக்கு மனம் மகிழ்ச்சி அடையும். ஆனால் உடனே உன்மனம் பழைய நிலைமைக்கு வந்துவிடும். பேசுபவர்கள் கேட்பவர்கள் புரியும் மொழியில்பேசினால் தானே, அவர்    என்ன சொல்லவருகிறார் என்று தெரியும்.  வெறும் காசுக்காக,   கைத்   தட்டலுக்காக எதை வேண்டுமாலும் பேசுவதை நிறுத்திக்கொள். பலரின் பொழுதைப் போக்க நீ பேசுவதை நிறுத்திக்கொள். இந்த உள்விதி  மனிதனுக்கு அவைகள்  தேவையில்லை. யாருமே  அழகான ஆபத்தான   பூக்களை சூடிக்கொள்வதில்லை.  அழகாக மற்றும்எளிதில் கிடைப்பதால் நஞ்சு தன்மையுள்ள உணவுப் பொருட்களை  சாப்பிடுவதில்லை. அதுபோல நீயும் ஆபத்தான எண்ணங்களை மக்கள் விதைக்க  விரும்பாதே. 
பண்பு மிக்க மனிதா! அதிகாரம் உனது கையில் கிடைக்கும்போது 'நான்' என்கிற  ஆணவம் எங்கிருந்து வருகின்றது?' நான் சொல்லும்படி   தான் எல்லாம்   நடைபெற  வேண்டும்' என்கிற அரக்கத்தனமான கட்டளை எப்படி முளைத்தது?  இப்படித்  தலைகால் தெரியாமல் கும்மாளம் போட்டுக் கொக்கரித்தால் அதுவே உனது அழிவுப் பாதைக்கு கொண்டுபோய் விடும் என்பதை மறந்துவிடாதே! ஏனென்றால்  அவ்வாறான அகம்பாவச் செயல்கள் என்னை மதிக்காமல், உண்மைக்குப்  புறம்பாக  நடைபெற்றால் அவைகள் சரியாகச் செயல்படா!  
பெருமை கொண்ட மனிதா! ஒவ்வொரு செயலைச் செய்யும்போது எனக்கு கீழ் வரும்  கேள்விக்கு பதிலளித்த பின்னரே செய்யத் தொடங்கு. அதாவது சொல்பவர் யார் எப்படிப்பட்டவர்?  என்ன குணம் கொண்டவர்?   நம்பிக்கைக்கு உரியவரா?   நல்ல  எண்ணங்களை கொண்டவரா? பணம் கொடுத்தால் தான் காரியம் செய்பவரா? அன்பு,  இரக்கம் கொண்டவரா? எனபதைப் பார்த்துத் தான் செயலில் ஈடுபட வேண்டும். 
இனிய மனிதா! மற்றவர்களுக்குத்  தீமை கொடுக்கும் தவறான வேலைகளை  எப்போதும் செய்யாதே! உனது வாழ்கையை அழிக்கச் செய்யும் சோம்பேறித்தனத்தை  அறவே விட்டொழி. இதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். குழப்பமானவேலைகளை என்னிடத்தில் விட்டுவிடு. தெளிவான,  குழப்பமில்லாத வேலைகளை நீ சரியாகச் செய்து விடு. 
பணிவுள்ள மனிதா! உனக்கு அவ்வப்போது ஏற்படும் உடல் வலி, தலைவலி,  உறக்கமின்மை, கைகால் அசதி, பசியின்மை, குடும்பம் மற்றும் உறவினர்களால்  ஏற்படும் பிரச்சனைகள், தாம்பத்திய விவகாரம் ஆகியவை அனைத்திற்கும் நீ தான்  காரணம். இருப்பினும் உனக்குள் நான் இருப்பதால் இவைகளை நான் தீர்த்து  வைக்கிறேன். ஆனால் இனிமேல் நீ நன்மை தரும்செயலன்றி வேறு செயலில் ஈடுபடக்கூடாது. அதைப்பற்றிய கவலையை விட்டுத் தள்ளு. நான்பார்த்துக் கொள்கிறேன்.
இனிய மனிதா! நீ ஓய்வெடுத்தாலும் எனது ஆன்ம ஓட்டம் ஓய்வெடுக்காமல்  உன்னையேச் சுற்றிசுற்றி வருகிறேன். நீயே என் கோவில். உள்ளே இந்த உள்விதி   மனிதனே தெய்வம். உன் உடலே எனது பாதுகாப்புக் கோட்டை. அதை காப்பதே என்  லட்சியம். உனது உடலில் நோய் அண்டவிடாமல் காக்கவும்,  தீய சக்திகளைத்  தடுக்கவும் உன்னை எப்போதும் புத்துணர்வோடு வைத்திருக்கவே நான் உனக்குள்  உள்ளேன்.
மதிப்புமிக்க மனிதா! நான் சரியாக இயங்க உனக்குக் கவலைகள் ஏதும் இருக்கக் கூடாது. அதற்கு நீ சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடவேண்டும். உடல்  ஆரோக்கியத்திற்குத் தினமும் உடற்பயிற்சி, தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி,  ஒழுக்கத்தை கடைபிடித்தல் போன்றவைகளால் எனது ஜீவ ஒளி உன்னைச் சுற்றிலும்   பரவும். அதுவே உனது முகம் வாடாமல் புதுப்பொலிவுடன் எப்போதும் முகமலர்ச்சியை இருக்கச் செய்யும். நீ செய்யும் செயல் அர்த்தமுள்ளதாய் இருக்கவேண்டும். நன்மை  தருவதாய் இருக்கவேண்டும்.  
உள்விதி மனிதனின் ஓட்டம் தொடரும்.   
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 
கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   
மிகநன்று              அல்லது 
நன்று                       அல்லது 
பரவாயில்லை  அல்லது 
இன்னும் தெளிவு தேவை  
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது 
e.mail id :    gangadharan.kk2012@gmail.com 
 
Good..
ReplyDelete