Pages

Tuesday 9 October 2012

எந்த மதம் உயர்ந்த மதம் என்று தெரிந்துகொள்ள ஆசையா? DO YOU WANT TO KNOW WHICH RELIGION IS THE BEST ONE


அனுபவப் பொன்வரிகள் 


மதுரை கங்காதரன்  

எந்த மதம் உயர்ந்த மதம் என்று தெரிந்துகொள்ள ஆசையா?
DO YOU WANT TO KNOW 
WHICH RELIGION IS THE BEST ONE?



இந்த உலகில் பல மதங்கள் இருக்கின்றன! இந்து மதம், இஸ்லாம் மதம், கிறித்துவ மதம், புத்த மதம், சீக்கய மதம் என்று பலதரப்பட்ட மதங்களை இருப்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். அவற்றில் எந்த மதம் உயர்ந்தது ? என்று சொல்வதற்கு முன் எல்லா மதத்தின் கோட்பாடுகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு தான் முடிவு சொல்ல முடியும்.

இதற்கு ஒரு அருமையான உதாரணத்தின் மூலம் புரிய வைக்கலாம். நமது உயிர் வாழ்விற்கு மிகவும் முக்கியமானது உணவு. சிலரிடத்தில் உங்களுக்கு பிடித்தமான உணவு எது என்று கேட்டால் 'அரிசிச் சாப்பாடு ' என்பார்கள். ஒரு சிலருக்கு 'கோதுமைச் சப்பாத்தி ' என்றும், கூழ் என்றும், கஞ்சி என்றும், ரொட்டி, பீசா, இட்லி, தோசை, பொங்கல் என்று வித விதமாகச் சொல்வார்கள். அனால் எல்லாமே பசியை போக்குவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுகின்றது. அதாவது அவைகளுடைய செயல் ஒன்று தான். 


இதில் கோதுமைச் சப்பாத்தி சாப்பிடுகின்றவரை அழைத்து, நீங்கள் சாப்பிடுவதைவிட அரிசிச் சாப்பாடு மிகவும் ருசியாக இருக்கும் என்று சொன்னால், அதை மருந்திற்கும் கூட சாப்பிட்டுப் பார்க்காமல் இல்லை..இல்லை சப்பாத்தி தான் ருசி என்கிற பதில் தான் வரும். இப்படி பலரிடத்தில் கேட்டால் அவரவர் விருப்பபடி தான் கூறுவார்கள். 

அதேபோல என் மதம் தான் சிறந்தது என்று சொன்னால் ... உடனே மற்றவர் இல்லை ..இல்லை என் மதம் தான் சிறந்தது என்று பதில் வரும். சில சமயங்களில் வாதங்கள் கூட வரும். இதற்கு காரணம் ஒரு மதத்தில் இருப்பவர்கள் மற்றொரு மதத்தினை பற்றிய நூல்களை படிக்காமல் இருப்பது. அதாவது சப்பாத்தி சாப்பிடுகிறவர், அரிசிச் சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்திருந்தால் அவருக்கு உடனே ஒன்று தெரிய வரும். இதுவும் ஒருவகை ருசியுடன் இருக்கிறது. பசியைப் போக்குகிறது என்று!


எந்த ஒரு மதமும் தீயப்பழக்கத்தை அனுமதிப்பதில்லை. மக்களிடம் அன்பை, இரக்கத்தை காட்டச் சொல்கின்றது. கொலை, கொள்ளை போன்றவற்றை செய்யச் சொல்வதில்லை. மக்களிடையே கோபம், போட்டி, பொறாமை ஆகியவற்றை அறவே துறக்கச் சொல்கிறது. மக்கள் போற்றும் எல்லா மதங்களில் உயர்ந்த கருத்துக்களே இருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் மனிதனுக்கு நல்வழி காட்டும் நூலாகவே இருக்கின்றது. அதை பின்பற்றுபவர்கள எல்லோரும் நன் மக்களாகவே திகழ்கின்றனர். அறவழியில், சத்தியத்தைக் கடைபிடித்து  கடமைகளை தவறாமல் பின்பற்றச் சொல்கின்றது. மனிதனை மேன்மைபடுத்துவதற்கு உதவியாக இருக்கின்றது.    

முடிவு ! எல்லா மதங்களும் மனிதனின் நல்வாழ்விற்காக, மகிழ்ச்சி தருவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அனைத்து மதங்களும் சிறப்பு வாய்ந்தவை, பெருமை வாய்ந்தவை, உயர்ந்து நிற்பவை.

மதங்களை போற்றுவோம்,

மனிதர்களை நல்வழி படுத்துவோம். 

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

1 comment: