Pages

Monday 15 October 2012

மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் EASY WAYS TO AVOID DEPRESSION


அனுபவ பொன் வரிகள் 


மதுரை கங்காதரன் 

மன அழுத்தத்தை  தடுக்கும்  எளிய வழிகள் 
EASY WAYS TO AVOID DEPRESSION  

மனிதனுக்கு 'மன அழுத்தம் ' என்னும் வியாதி தான் கொடிய வியாதி. அது சப்தமில்லாமல் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும். அதை மனிதனை அளிக்கும் 'எமன் ' என்று கூட சொல்லலாம். அது எதனால் வருகின்றது மற்றும் அதற்க்கான தீர்வுகளைப் பார்ப்போம். 

வரும் காரணம் : 1


மனதில் 'தாழ்வு மனப்பான்மை ' மேலோங்கி நிர்ப்பது. தான் மற்றவர்களைக் காட்டிலும் எல்லாவிதத்திலும் குறைந்தவன் அல்லது தனக்கு மதிப்பு ஏதுமில்லை என்பது போல் ஒரு உணர்வு. 

அதன் தீர்வு : 1


இப்போது இருக்கும் நிலைமையை மட்டும் வைத்து எண்ணிக்கொண்டு இருக்காதே! உனது வாழ்க்கையைவிட மோசமாக உள்ள, சாவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் கோடிகணக்கான மக்களின் வாழ்கையை ஒருமுறை பார். அவர்களே நம்பிக்கையோடு காலம் தள்ளுகின்றபோது உன்னால் வாழமுடியாதா! தாழ்வு மனப்பான்மையை உன் மனதிலிருந்து அகற்றிவிடு. உன் வாழ்கையை உயர்த்த வரும் உழைப்பு, முயற்சி என்கிற அழகிய தங்க ரதம் உன்பக்கத்தில் நிற்கிறது. உனது தாழ்வு மனப்பன்மையை தூக்கி எறிந்துவிட்டு , அந்த ரத்தத்தில் ஏறிக்கொண்டு வீறுநடை போடு. அதில் உன்னைபோன்று பாதித்தவர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுக்கு நல்வாழ்வு கொடு. அவர்களுக்கு புது தெம்பு கொடு. இன்றிருக்கும் நிலைமை நிரந்தரமானவை அல்ல. மாறக்கூடியவை. மன மகிழ்ச்சி கொள். அனைத்தும் சரியாகிவிடும்.


வரும் காரணம் : 2


வாழ்வில் எவ்வித பிடிப்புமில்லாமல் வீணான கற்பனைகள், எண்ணங்களை வளர்த்து கொண்டு 'தன்னம்பிக்கை 'இல்லாமல் இருப்பது.

அதன் தீர்வு : 2


அதற்கு காரணம் 'பயம் ' தான். யாரைக்கண்டும் பயப்பட தேவையில்லை! அவர்களும் உன்னைப்போன்ற மனிதர்கள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் கிடையாது. அவர்களுக்கென்று தனிப்பட விதத்தில் 'பலம்' தனியாக இருப்பதில்லை. உன்னாலும் பலம் பெறமுடியும். அதற்கு 'தன்னம்பிக்கை ' கொள். உன் வாழ்வில் பிடிப்பு தானாக வரும்.    


வரும் காரணம் : 3


பிறர் சுட்டெரிக்கும் வார்த்தைகளால் பேசி அவமதிப்பது. கௌரவத்தை குலைப்பது, உண்மைக்குப் புறம்பாக பழிகளை சுமத்துவது போன்றவற்றை பெரிதாக எண்ணி மனதளவில் வருந்திக் கொண்டிருப்பது.

அதன் தீர்வு : 3


வாழ்கையில் முன்னேறும்போது 'விமர்ச்சனங்கள்' வரத் தான் செய்யும். அதைப்பற்றி அதிகம் கவலை படாமல் , உதறிதள்ளி விட்டு உன்னுடைய குறிக்கோளை நோக்கி பயணம் செய்துகொண்டிரு. அப்போது தான் அவைகள் உன் காதில்விழாது. வெற்றி உனதே!  


வரும் காரணம் : 4


தொழில்களில் அல்லது வேலையில்  முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது, செய்யும் காரியத்தில் முழு ஈடுபாடு செலுத்த முடியாமல் கவனக் குறைவாக செயல படுவது, மறதியின் காரணமாக பல பிரச்சனைகள் உருவாவது. 

அதன் தீர்வு : 4


முடிவு இடிப்பது, வேலையில் கவனக்குறைவு, மறதி  ஆகியவற்றிக்குக் காரணம் மனம் ஒருமுகப் படுத்தமுடியாமல் இருப்பது. அதை களைவதற்கு தியானப் பயிற்சி சிறிதளவு தினமும் மேற்க் கொள்ளுங்கள். நாளடைவில் அனைத்திலும் தேர்ச்சி பெறுவீகள். 


வரும் காரணம் : 5


சில நேரத்தில் வழக்கமாக இருக்கும் சூழ்நிலைகள் பதிலாக புதிய சூழ்நிலைக்கு மாறும் போது , அதை சமாளிக்க வழி தெரியாமல் திணறுவது, புதிய உணவு மற்றும் உறவுகளில் மாற்றங்கள், தூங்கும் நேரத்தில் பெரிய மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல் திண்டாடுவது.  

அதன் தீர்வு : 5


எவருக்குமே சூழ்நிலைகள் மாறும்போது அனைத்துமே புதியதாயும், கூச்சமாகவும், யாரிடத்தில் என்ன கேட்பது என்று குழம்புவதும் , தான் மட்டும் தனியாக இருப்பது போன்ற பிரமையும் உண்டாகும். அந்த சமயங்களில், தான் மட்டுமே அதிகமாக கஷ்டப்படுவது போலவும் ஒரு உணர்வு உண்டாகும். ஆனால் பழகப் பழக அந்த சூழ்நிலைகள் உங்களுக்கு பிடிக்கத் துவங்கிவிடும். அதுவரை பொறுமையுடன் மாற்றத்திற்கேற்ப அனுசரித்து நடந்து கொண்டால் அந்த சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். ஆத்திரப்பட்டு அப்போது சட்டுபுட்டென்று முடிவு எடுத்துவிடக்கூடாது. அப்படி எடுக்கும் முடிவு சரியாக இருக்காது. பொறுமை கொள். உனக்கேற்றவாறு சூழ்நிலைகள் மாறும்.    

வரும் காரணம் : 6


வேலை, வேலை என்று ஓய்வில்லாமல் , மனதிற்கு சிறிதளவு கூட ஓய்வு கொடுக்காமல் இருப்பதும், பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் கலங்கி நிற்பது.

அதன் தீர்வு : 6


'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது சரிதான். ஆனால் உடலை, மனதை வருத்திக்கொண்டு உடல் ஆரோக்கியம் இழந்துவிடக்கூடாது. வேலைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதில் தவறில்லை. ஆனால் அதுவே பல புது பிரச்சனைக்கு வழிவகுக்கக் கூடாது. உடல், மனதிற்கு கட்டாயம் நிம்மதியான ஓய்வு தேவை. அது தூங்குவதால் மட்டுமே சாத்தியமாகும். அதற்காக ஒரு நாள் பிக்னிக், வெளி, உள்நாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வதால் மனதில் உற்சாகமும், உடலில் புத்துணர்ச்சியும் உண்டாகும். பிரச்சனையினால் ஏற்படும் கலக்கம் மறைந்து அதை எதிர்கொள்ளும் மனவலிமை கிடைக்கின்றது. 

வரும் காரணம் : 7


தோல்விகளையே நினைத்துக்கொண்டு மனச்சோர்வையும், மன உறுதியையும் இழத்தல். 

அதன் தீர்வு : 7


'தோல்வி' என்பது ஒரு பனிப்பாறை. வெப்பம் தாக்காத வரையில் அதன் உறுதி 'டைட்டானிக்' போன்ற மிகப்பெரிய கப்பலையே கவிழ்த்து விடுமளவிற்கு வல்லமை கொண்டது. ஆனால் முயற்சி மற்றும் கடின உழைப்பு என்னும் வெப்பம் அதன்மீது படும்போது , அந்த மலை போன்ற பனிப்பாறை உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். ஆகையால் தோல்வி ஏற்படும் போது உழைப்பையும், முயற்சியையும் விட்டுவிடக் கூடாது.   

வரும் காரணம் : 8



அன்பு உள்ளங்களை எதிர்பாராமல் இழக்கும்போது அதனால் தற்கொலை பற்றிய எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும் போதும் .... 

அதன் தீர்வு : 8


எதிர்பாராமல் அன்புள்ளங்களை இழக்கும்போது மாமதில் பூகம்பங்கள், எரிமலை மற்றும் சுனாமி போன்ற ஆபத்தான உணர்வுகள் ஓங்கி வரும். உன் மனஉறுதி கொண்டு பூகம்பத்தை நிறுத்து! அன்பு , சாந்தம், இரக்க குணத்தை அதிகரித்து எரிமலையை குளிரச் செய். தன்னம்பிக்கை கொண்டு சுனாமி அலைகளை கட்டுப்படுத்து. நீ நினைப்பது இனி நடக்கும்.

வரும் காரணம் : 9


பிறர் உதவியால் எளிதாக தீர்க்கும் பிரச்சனைகளை மனதிலே அடக்கிக் கொண்டு , பிறரிடம் அந்த பிரச்சனை மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது....

அதன் தீர்வு : 9


நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் அதே பிரச்சனையை எதிர்கொண்டு சிலர் எளிதாக தீர்த்து வெற்றி கண்டிருப்பார்கள். அவர்களிடம் பிரச்னையை பகிர்ந்துகொண்டு அதன்படி நடந்தால் கை மேல் பலன் கிடைக்கும். அப்படிப்பட்ட நபர்களின் நன்பகத்தன்மையை கண்டிப்பாக உறுதி செய்துகொள்ளவேண்டும்.  

வரும் காரணம் : 10


உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் தொந்தரவினால் எப்போதும் அழுவது.  

அதன் தீர்வு : 10


தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையினை உடனடியாக மேற்கொண்டு அதன்படி நடப்பது. உடற்ப்பயிற்சி, தியானம், யோகா மற்றும் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும்போது  உங்கள் உடல் மற்றும் மனம் புதிய பலம் பெரும். 

வரும் காரணம் : 11


தான் நினைத்தது நடக்காமல் இருக்கும் சமயத்தில் ஆவேசமும், எரிச்சலும் அதிகரிக்கும் போது....

அதன் தீர்வு : 11


எந்த ஒரு காரியம் நடக்கவேண்டுமென்றால் காலமும், நேரமும் கை கூடும் வரை காத்திருக்க வேண்டும். பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை அடைவீர்கள்.

வரும் காரணம் : 12


நேரம் காலம் தெரியாமல் செல்போன் அழைப்புகள் வருவது..

அதன் தீர்வு : 12


செல்போன் அழைப்புகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஏற்றுக்கொண்டு பதிலளியுங்கள். மற்ற நேரத்தில் 'சைலன்ட் மோட் ' இல் வைத்துக்கொள்ள முயலுங்கள். 'தலை போகும் காரியத்திற்கு ' மட்டும் மதிப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளுங்கள்.


மன அழுத்தம் என்பது மனதில் ஏற்பட்ட காயங்களை  அடிக்கடி நினைவுகளின் மூலம் வெளிக்கொண்டு வந்து, அதன் மூலம் வீணான கற்பனைகளை வளர்த்து, விபரீத எண்ணங்களை உருவாக்கி, ஆபத்தான செயலில் முடிவது.

மன அழுத்தத்தின் வேகம் அசுர வேகம். எதையும் சிந்திக்காமல் , சூழ்நிலைகளை மறக்கச் செய்து ஆபத்தான முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டது. 

பொதுவாக மன அழுத்தத்தை தடுக்க , எதையுமே திட்டமிட்டுச் செய்யுங்கள். அதனால் செயல்களை செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும் . நிதானமாக , நினைத்த நேரத்தில் வெற்றிகரமாக செய்துவிடலாம்.

திட்டமிடுவோம்!


மன அழுத்தம் ஏற்படுவதை தடுப்போம் !


  

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

3 comments: