Pages

Monday, 17 March 2014

பிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்

16.3.14 அன்று உலகத் தமிழ் ஆய்வுச் சங்கம் , மதுரை .  நடத்திய ஆய்வரங்கம் - கவியரங்கம் 
இடம் : நாடார் மகாசன சங்க மேன்சன் , மேல்மாடி அரங்கம், மதுரை.
நேரம் : காலை 10.00 முதல் மதியம் 1.30 மணி வரை 
(ஒவ்வொரு மாதம் மூன்றாம் ஞாயிறு அன்று நடைபெறும்)

பிறமொழி எழுத்தும் சொல்லும் 
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும் 

 புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 


மனிதனுக்கு வயதானால் ஊன்றுகோல் அவசியம் 
தமிழுக்கு வயதாகிவிட்டதா? பிறமொழியை ஊன்றுகோலாய் கொள்ள 

பஞ்சனை தேவையில்லை தாலாட்டு தமிழாய் இருந்துவிட்டால் 
பசியும் பறந்துவிடும் அமுதமாய் இனிய தமிழை கேட்கும்போது 

தமிழ் சொற்களைப் பார்த்தால் பரவசம்  படித்தால் நவரசம் 
அணைத்தால் கனிரசம் அள்ளிப் பருகினால் தன் வசப்படும் அனுபவம் 

தமிழனின் வெற்றி தமிழ்மொழியை  செம்மொழியாய் அறிவித்த தினம்   
தமிழுக்குச் நிமிர்ந்து நிற்கும் சக்தியுண்டு பிறமொழியை கட்டியாள திடமுண்டு 

பலருக்கு தூது சென்ற தமிழ் மொழிக்கு பிறமொழி கலப்பினால் 
நாம் தமிழைக் காக்க தூது செல்லும் அவலநிலை !

பிறமொழிச் சொற்களை கலந்துபேசும் மதிமயங்கிய தமிழனே 
தமிழ்மொழி அழிந்துவிடுமுன்னே நீ விழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்வாய் 


தூயக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்த தமிழ்மொழி பிறமொழி 
நஞ்சினால் செய்கை சுவாசத்திற்கு ஆளாக்கி விடாதே 

தமிழா நீ காற்றோடு கலந்தால் தமிழ் கீதமாய் ஒலிப்பாயாக 
தமிழா நீ நெருப்போடு ஐக்கியமானால் தமிழாய் பிரகாசிப்பாயாக 

தமிழா நீ தண்ணீரில் கரைந்தால் தமிழ் அமுதமாய் இனித்திடுவாயாக 
தமிழா நீ நிலத்தில் புதைந்தாலும் தமிழ் மரமாய் வளருவாயாக 

தமிழா நீ ஆகாயத்தில் மறைந்தாலும் தமிழ்மழை மேகமாய் இருப்பாயாக 
தமிழா நீ செந்தமிழ் பேசினாலும் பிறமொழி கலந்து பேசாமல் இருப்பாயாக 

தமிழா நீ உறுதி கொள் பிறமொழி சொற்களிருந்து தமிழை மீட்பேன் என்று 
தமிழா நீ இன்றே புறப்படு மீண்டும் தனித்தமிழ் இயக்கம் புத்துயிர் கொடுக்க 

பேசுக செந்தமிழ் சொற்கள் !
தவிர்க்க பிறமொழி சொற்கள்! 

வாழ்க செம்மொழித் தமிழ் !
வேண்டமே பிறமொழிக் கலப்படம் !


***********************************************************************************************************
நன்றி , வணக்கம்...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

Post a Comment