பிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு
WHEN COMPARE WHY DO YOU WANT TO BECOME LIKE OTHER ?
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
பிறரைப் பார்க்கிறோம்
சில நேரத்தில் பேசுகிறோம்
வாய்ப்பு கிடைத்தால் பழகுகிறோம்
அத்தோடு நிற்கிறோமா? மனம் என்ன செய்கிறது?
ஏதோ ஒன்று கவருவதால் தானே பார்க்கிறது
எது கவருகின்றதோ அதை போல் மாற விரும்புகிறது
வாழும் சூழ்நிலைப் பற்றி கவலை கொள்ளாது
இருக்கும் நிலைமை பற்றி கவனம் கொள்ளாது
ஆசை அலையாய் மனதில் எழுகிறது
பிடிவாதம் பிடித்தாவது அடைய துணிகிறது
சண்டைக்கும் எதிர்ப்புக்கும் தயாராகிறது
வசதி இருந்தால் மறு வினாடியே அடைகிறது
ஆடையின் நிறம் பார்த்து அதை வாங்க முயல்கிறது
நகை அழகு கண்டு அதை போல் செய்யக் கொடுக்கிறது
கண்கவர் அலங்காரம் ஆசைப்பட்டு செய்து கொள்கிறது
வாகனத்தில் செல்ல கடன்பட்டாவது வாங்கச் வைக்கிறது
போலி ஆடம்பர வாழ்க்கை வாழவும் துணிகிறது
பிறர் முன் நடிக்க மனதையும் அடகு வைக்கின்றது
கவர்ச்சி போதையில் கண்டதை செய்ய குறிவைக்கிறது
இல்லாததை இருப்பதுபோல் காட்ட ஆசைபடுகிறது
அட நேரில் பார்ப்பதை பார்த்து மாறினால் தவறில்லை
திரைப்படம் தொடரில் வருவதை அல்லவா நாடுகிறது
விளம்பரக் கவர்ச்சியில் மதிமயங்கி ஓடுகிறது
போலி அன்பைக் காட்டுபவர் சொற்படி நடக்கிறது
பகட்டு பள்ளியில் படிக்க பல ஆயிரம் செலவு செய்கிறது
இருக்கின்ற சேமிப்பு கொடுத்தாவது இடத்தை நினைக்கிறது
நகைகளை அடகு வைத்தாவது வசதியாக வாழ ஆசைபடுகிறது
இருப்பதை விற்றும் கடன் வாங்கியும் வீட்டை வாங்குகிறது
நாளை நடக்கப் போவதை நினைக்காமல் இருக்கிறது
தேன் ஒழுக பேச்சில் மயங்கி தள்ளாடுகிறது
உறவையும் நட்பையும் மறக்கின்றது
குறைந்த நேர இன்பத்திற்கு கணக்கில்லாமல் தருகிறது
தேன் ஒழுக பேச்சில் மயங்கி தள்ளாடுகிறது
உறவையும் நட்பையும் மறக்கின்றது
குறைந்த நேர இன்பத்திற்கு கணக்கில்லாமல் தருகிறது
சிறுத்தையைப் பார்த்து நத்தை ஓடமுடியுமா?
யானையைப் பார்த்து பூனை பெரிதாக வளர முடியுமா?
குயிலைப் போல் காக்கை இனிமையாக குரல் எழுப்ப முடியுமா?
மயிலைப் போல் வான்கோழி நடனமாட முடியுமா?
யானையைப் பார்த்து பூனை பெரிதாக வளர முடியுமா?
குயிலைப் போல் காக்கை இனிமையாக குரல் எழுப்ப முடியுமா?
மயிலைப் போல் வான்கோழி நடனமாட முடியுமா?
பிறரைப் பார்த்து சூடு போட்டுக் கொள்கிறது
முடியாததை கூட முடிக்க முரண்டு பிடிக்கின்றது
முழு வாழ்கையும் திருப்தியில்லாமல் முடிகிறது
பிறரை போல் மாறி தனித் தன்மை இழக்கிறது
படைப்புகளில் எத்தனை விதம் ? மனங்களில் எத்தனை விதம் ?
படைப்புகளில் எத்தனை விதம் ? மனங்களில் எத்தனை விதம் ?
எண்ணங்கள் எத்தனை விதம்? மனிதர்களில் தான் எத்தனை விதம் ?
இத்தனை விதங்கள் எதற்கு? ஒன்றாக இருந்தால் வாழ்க்கை ருசிக்குமா?
தற்காலிகத் திருப்திக்கு அதிக சிரத்தை எடுக்கிறது
அந்நேரம் நெஞ்சத்தை சமாதானப் படுத்துகிறது
தூரத்தில் தெரியும் வெளிச்சம் நிலவென நினைத்தது
அருகில் செல்லும் போது மனது உணர்ந்தது உண்மை
பிறரைப் பாருங்கள் !
அன்பைக் காட்டுங்கள்!
ஒப்பிடுவதை விட்டுவிடுங்கள்
என்றும் உங்கள் வாழ்க்கை இனிக்கும்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment