Pages

Monday, 31 March 2014

இது நம்ம சானல் வழங்கும் - APRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி

இது நம்ம சானல் வழங்கும்


'இலவசங்களும் விலையாகின்றது' 

பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி 


முட்டாள்கள் தின சிறப்பு நிகழ்ச்சி 
APRIL FOOL SPECIAL 
மதுரை கங்காதரன் 

பேட்டி எடுப்பவர் : இது நம்ம சானல் நிர்வாகி 
பேட்டி கொடுப்பவர் : பிரபல நடிகர் XXX 


1.  "ஒவ்வொரு படத்திலும் கவர்ச்சிகரமா, விதவிதமா பலநிறத்திலே  ஆடைகளைப் போட்டு வர்றீங்களே, அதுக்கெல்லாம் எவ்வளவு செலவு செய்றீங்க"

" செலவா? வாய்ப்பே இல்லை ! எல்லாமே இலவசம் தான் !"

2. "பல இடங்களுக்கு குறிப்பா வெளிநாட்டுக்கும் மற்றும் உள்நாட்டிலே புகழ்பெற்ற முக்கிய இடங்களுக்கு போறீங்களே அதுக்கு எவ்வளவு தர்றீங்க"

"எவ்வளவு.... தரணுமா? தங்குறதுக்கும், சுத்துறதுக்கும் , சாப்பாட்டுக்கும் எல்லாமே அவங்களோட ஏற்பாடு தான். அதாவது இலவசம் தான் "

3. உங்களோட முடியலங்காரத்திற்கு எவ்வளவு கொடுக்குறீங்க ?

" அதுவும் இலவசம் தான் "

4. வித விதமான கார் , பங்களான்னு அனுபவிக்கிறீங்களே அது ?

"எல்லாமே இலவசம் தான். அந்த மாதிரி வசதி செய்து கொடுத்தாத் தான் படப்பிடிப்புக்கு போவேன் "


5. பரவாயில்லையே! உங்க படத்திலே அனல் கக்கும் வசனம், மனதைத் தொடும் பாட்டு, மக்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை இவைகளெல்லாம் நீங்களே எழுதியதா?

என்ன விளையாடுறீங்களா? எனக்கு படிக்கத் தெரியாது. எல்லாம் மத்தவங்க எழுதியது, பாடியது. பலசமயங்களிலே எனக்கு பதிலா வேறொருவர் பேசுவாங்க. நான் சும்மா வாயசைப்பேன். மத்தபடி அவங்களே பார்த்துக்குவாங்க !

6. அப்படியா! அப்புறம் நீங்க ரொம்ப நல்ல நடிக்கிறீங்க. 'ஸ்டைல்' அருமையோ அருமை , நல்ல நடனம் ஆடுறீங்க. இதெல்லாம் நீங்களா செய்றதா?

என்னோட பங்கு இதுலே ஒண்ணுமில்லை. டைரக்டர் என்னென்ன செய்யச் சொல்றாரோ அப்படியே செய்வேன். 


7. உங்களோட சிறப்பு பறந்து பறந்து சண்டை போடுறது ! உங்களுக்கு சண்டைப் போடத் தெரியுமா? எந்த அளவுக்குத் தெரியும்?

எனக்கு எதுவும் தெரியாது. சும்மா கை கால் அசைப்பேன். அவ்வளவு தான். பொதுவா பல இடத்திலே என்னோட 'டூப்' தான் சண்டைக் காட்சிகளிலே நடிப்பாங்க !

8. உங்களுக்கு எந்தெந்த மொழி தெரியும் ? தமிழ் நல்லாப் பேசுவீங்களா?

இதுலே ஒண்ணு நல்லா கவனிக்கணும். தமிழ் படவுலகிலே தமிழ் பேசத்தெரியாதவங்களுக்குத் தான் மதிப்பும் மரியாதையும் தர்றாங்க.   


9. தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்கிட்டே பிடிச்ச அம்சம் என்ன?

எனக்கு பிடிச்ச விஷயம் தமிழ் மக்கள் உண்மையில் தமிழனை முன்னேற்றவிடமாட்டாங்க. உதாரணமா என்னையே சொல்லலாம்.     

10. ஆமா !  நான் தெரியாத்தனமாய்க் கேட்கிறேன். நீங்க சும்மா வர்றீங்க போறீங்க. பலது மத்தவங்கத் தான் செய்றாங்க. மேலும் எல்லாமே இலவசம்ன்னு சொல்றீங்க .. ஆனா உங்க படத்தை பல நூறு கொடுத்து கோடிக்கணக்கான மக்கள் பார்க்கிறாங்களே. அது எதுக்குங்க ?

"நல்லா சொன்னீங்க. வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும். ஆனா நடிப்புக்காரங்களுக்கு பணம் கோடி கோடி கொட்டும். எனக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் எப்படி கிடைக்கும்? மேலும் படத்தை வெளியிடுபவர்கள் பல கோடி எப்படி சம்பாதிக்கிறது? மக்கள் கொடுக்கத் தயாராக இருக்கும்போது அதை வாங்குறதுக்கு கை வலிக்குமா என்ன? 

11. கடைசியாக ஒரு கேள்வி? உங்களோட ஆசை என்ன? அதுக்கு என்ன திட்டம் வைச்சிருக்கீங்க ?

ரொம்ப சின்ன ஆசை தான். திரைப்பட உலகிலே ஒரு கலக்கு கலக்கினது போல அரசியல்லேயும் ஒரு கலக்கு கலக்கணும். மக்கள் மனசு வச்சா நான் முதல்வராக , ஒரு பிரதமராக வரலாம். அந்த நாளைத் தான் எதிர்பார்த்துட்டே இருக்கேன். எனக்கு படப்பிடிப்புக்குப் நேரமாச்சு. இத்தோடு முடிச்சுக்குவோம். நன்றி .. வணக்கம் "   

இதுவரை என்னகளோ இது நம்ம சானல்க்காக எங்களுக்கு பலவிதமான புதுத்தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி"

"நன்றி"

இதிலிருந்து தெரிவது என்னவென்று இப்போது உங்களுக்கு  நன்றாக புரிந்திருக்கும் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&     

Saturday, 29 March 2014

சின்னத்திரையில் வருவது தொடரா? தொந்தரவா? - YOU ARE SEEING T.V. SERIAL OR PROBLEMS?

   சின்னத்திரையில் வருவது  
    தொடரா? தொந்தரவா?
       
       YOU ARE SEEING 
T.V. SERIAL OR PROBLEMS?
 
        புதுக்கவிதை

   மதுரை கங்காதரன்

வாய்ச்சண்டைகளின் சங்கமம் இங்கு தானோ
செயற்கையாய் பேசும் பாத்திரங்களின் உதயம்

ஒப்பாரி வைப்பதில் தவறாமை
தகாத வார்த்தைகளின் பிறப்பிடம்

குணம் குப்பையில் போடும் கலாச்சாரம்
வஞ்சக எண்ணகாரர்களின் கூட்டம்

சூதுவாது செய்யும் அணிவகுப்பு
குடியும் கும்மாளமும் போடும் ராஜ்ஜியம்

    

பெண்களுக்கு பெண்களே செய்யும் கொடுமை
புதுமை பெயரில் முறை இல்லாத அரகேற்றங்கள்     

பொறுப்பில்லாமல் வாய்க்கு வரும் வசனம்
கேட்கவே எரிச்சலை வரவைக்கும் சம்பவங்கள்

சமுதாய சீரழிவுக்கு அச்சாரம் போடும் இடங்கள்
பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள்

ஏமாற்று வழிகளைத் சொல்லித்தரும் பாடங்கள்
சத்தியம் தர்மங்களைத் தூக்கி எறியும் காட்சிகள்

  

கெட்டவை அதிகமாக காட்டும் வன்முறைகள்
நல்லவைகளை குறையக் காட்டும் விதிகள்

தொடர் துரோகமே பிரதானமாய் தரும் தொடர்
கற்பனைக்கு எட்டாத நிகழ்ச்சிகளின் படைப்புகள்

பெண்மையை காற்றிலே பறக்கும் பட்டம் போல
ஆண்மையை அசிங்கப்படுத்தும் செயல்கள் 

இளைஞர்களை கெட்ட திசையில் திருப்பும் சுக்கான்
காதலை கூறுபோட்டு பார்க்கும் வேடிக்கை
     

குடும்ப உறவுகளை கொச்சைப் படுத்தும் சம்பவங்கள்  
தினமும் பார்க்க வைத்து சோம்பேறியாக்கும் பெட்டி

சந்தி சிரித்து பேசவைக்கும் குடும்பச் சண்டை
காட்சிக்கு காட்சி சந்தேகத்தின் பேயாட்டம்

சிரிப்பைத் தேடித்தேடியும் கிடைக்காத இடம்
அடக்கமில்லாத ஆடம்பர சவுடால் பேர்வழிகள்

இறக்கம் காட்டாத கல் நெஞ்ச அரக்கர்கள்
எந்த பாத்திரத்தையும் ஏற்கத் துணியும் பதுமைகள்

  

மனிதம் மறக்கச் செய்யும் புதுமைகள்
பணத்திற்காக உறவை அறுக்கும் சம்பவங்கள் 

உறவுக்குள் வெடிக்கும் கோபத்தின் உச்சம்
வாழ்க்கையை நரகமாக்கும் வழிகாட்டிகள்

தொடரை இழுக்க காரணமில்லாமல் சண்டைகள்
உழைக்காமல் பொழுதை கழிக்க வைக்கும் உணர்வுகள் 

இருக்கிற கஷ்டங்களை அதிகமாக்கும் இயந்திரம்
இளமைனங்களை நஞ்சூட்டும் விசமிகள்

              

எல்லோரும் கெட்டவரே எனக் காட்டும் பாங்கு
தொடரில் மூழ்கி தத்தளிக்கும் குடும்பங்கள்

சின்னத்திரையில் வரும் தொல்லையின் ஆக்கிரமிப்பா?
தொடர் நடைமுறைகளைக் காட்டும் காலக்கண்ணாடியா?

என்ன ஆச்சரியம் ! ஒரு பிரச்சனையின் முடிவு 
வேறொரு சம்பந்தமில்லாத புதிய பிரச்சனை 

தொடரை இழுக்க இது போதாதா?
உங்களை தொந்தரவு செய்ய இது போதாதா?

நீங்கள் தொடர் பார்ப்பவரா?
சின்னத்திரை தொடரா? தொல்லையா?
சொல்லுங்கள் உண்மையினை !

           

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^