அனுபவ வாழ்கை பொன் வரிகள் -
மதுரை கங்காதரன்
சொற்களும் பலருக்கு மருந்து தான்
இன்னும் வரும் ....
சொற்களும் பலருக்கு மருந்து தான்
டெலிபோன் இருந்த வளர்ச்சியை விட மொபைல் வளர்ச்சி மிகவும் அபரிதமானது. அது நல்லதோ இல்லையோ ஆனால் பலருக்கு அது ஆறுதல் தரும் கருவி. உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி எப்போது வேண்டுமானாலும் எளிதாக தங்களுடைய உணர்வுகளை அப்படியே கொட்டி தீர்ப்பதற்கு ஒரு வரபிரசாதம் என்று கூட சொல்லலாம்.
சொற்களும் அதன் செயல்பாடுகளும்
இதமான சொற்கள் இன்பத்தை கொடுக்கும்
அன்பான சொற்கள் ஆறுதலை கொடுக்கும்
பணிவான சொற்கள் பாசத்தை கொடுக்கும்
பண்பான சொற்கள் புத்துணர்ச்சியை கொடுக்கும்
வீரமான சொற்கள் விவேகத்தை கொடுக்கும்
கனிவான சொற்கள் மனபாரத்தை குறைக்கும்.
பல இடங்களில் சிலர் தரும் சொல் மருந்துகள்
வேலை பார்க்கும் இடத்தில் 'பாஸ் ' இப்படி பேசும்போது,
"ஏன் ? இதுக்கு போய் வருத்தப்படுறீங்க! இதெல்லாம் ஒரு anஅனுபவ பாடம்னு எடுத்துட்டு வேலையிலே இன்னும் நல்ல படியா கவனத்தை செலுத்துங்க.உங்களுடைய முன்னேற்றத்துக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன். அதுக்கான எந்த உதவியும் நான் செய்றேன். ஆல் தி பெஸ்ட். "
டாக்டர் தனது நோயாளியிடம் இந்த மாதிரி பேசினால்,
"இந்த வியாதி ஒண்ணுமே இல்லை! இன்னும் ஒன்னுரெண்டு நாள்லே ஜம்முன்னு எல்லோரும் போல சாப்பிடலாம், நடக்கலாம், ஓடலாம். உங்க கவலைங்களை என்கிட்டே விட்டுங்க, நான் பாத்துக்கிறேன்.யு வில் பி ஆல் ரைட்"
ஆசிரியர் தனது மாணவனிடத்தில்:
"ஏன்பா, நீ நல்லா படிக்கிற பையனாச்சே! எப்படி மதிப்பெண் குறைந்தது. உனக்குள்ளே நிறைய திறமை இருக்கு ! உன்னாலே நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும். அந்த நம்பிக்கை எனக்கு ரொம்பவே இருக்கு. முயற்சி செய். கட்டாயம் முன்னுக்கு வருவாய். பாடத்திலே எந்த சந்தேகம் என்கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கோ. ஆல்வேஸ் பீ கான்பிடென்ட் "
வாழ்கையில் கஷ்டப்படுகிறவரிடத்தில்:
"இந்தாப்பா, கஷ்டம் யாருக்குத்தான் இல்லை ! ஒவ்வொருவனுக்கும் ஒரு கஷ்டம். எல்லாரும் இடிஞ்சி உட்கார்ந்திட்டா கஷ்டம் ஓடிருமா என்ன? இப்போ நீ பார்க்கிற மக்களுங்ககிட்டே கஷ்டம் இல்லையா என்ன? அவங்க சிரிச்சு சந்தோஷமா இல்லையா? இன்றோடு உன்னோட கஷ்டத்தை குழி தோண்டி புதைச்சுடு. இன்று முதல் நீ ஒரு புது மனிதன். எந்த கஷ்டம் வந்தாலும் உதவி நான் இருக்கிறேன். கைக்கு எட்டிய தூரத்திலே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு. அதை பிடிக்க இப்போதே ஓடு"
வியாபாரத்தில் நஷ்டமடைந்தவரிடத்தில்:
"கவலைபடாதிங்க. இது ஒரு புத்தி கொள் முதல்.தோல்வி நிரந்தரம் கிடையாது. செய்த தவறுகளை திருத்திட்டு உங்களுடைய செயலை இன்னும் சிறப்பா செய்ய ஆரம்பிங்க கண்டிப்பா லாபம் கிடைக்கும். அதுக்கு நானும் சிறிது முதல் தர்றேன். துணிவோடு ஆரம்பியுங்க. வெற்றி தேடி வரும்."
திருமணமாகதவர்களிடம் பேசும்போது :
"வரன்அமையலேன்னு வருத்தப்படாதீங்க. லட்சுமி கடா ச்சியம் உள்ள உங்க பொண்ணுக்கு புளியம்கொம்பா ஒரு பையன் கிடைப்பான். அதுக்கு நான் கியாரன்டீ. கூடிய விரைவிலே இந்த வீட்லே மங்களகரமான நிகழ்ச்சி நடக்கும். கவலை எல்லாம் தீர்ந்திடும்."
வேலை தேடி அலைபவர்களிடம்:
"அது என்னப்பா வேலை! நீ படிச்ச படிப்புக்கும், திறமைக்கும் ஒரு நல்ல வேலை உன்னை த்தேடி வரும். அதுக்கு எப்போதும் தயாராக இரு. நீ போனதை நினைச்சி கவலைபடாதே. தைரியத்தை இழந்துவிடாதே. இன்னும் கொஞ்சம் முயற்சி செய். நாளைய பொழுது உனக்கு நல்ல செய்தி கொடுக்கும். பீ போல்ட் ."
வயதானவர்களிடம் பேசும்போது:
"இந்த வயசுலே கஷ்டப்பட்டு எந்த வேலையும் செய்யவேண்டாம். மனசுக்கு பிடிச்ச வேலைய செய்யுங்க, சாப்பிடுங்க, சந்தோஷமா இருங்க. நாங்க இருக்கிற வரைக்கும் நாங்க பாத்துக்கிறோம். நீங்க நிம்மதியா இருங்க. அது தான் எங்களுக்கு வேண்டும்"
குழந்தைகளிடம் பேசும் போது:
"இதுக்கெல்லாம் கோவிச்சுட்டு சாப்பிடாம இருக்கிறதா ? சமத்துள்ளே என் செல்லம். இப்படி அடம்பிடிக்க கூடாது. இப்ப நல்ல சாப்பிட்டு சந்தோஷமா இருந்தா தான் நாளைக்கு நீ வேண்டியதை அடையுறதுக்கு நல்ல தெம்பும் அறிவும் கிடைக்கும். குட் பாய்."
குடும்ப / உறவினர்களிடம் பேசும் போது:
குடும்பத்த காப்பாத்துறதுக்கு வீட்டை விட்டு கடல் தாண்டி வைத்திருக்கிறோம்.கொஞ்சம் குடும்ப சந்தோஷத்திற்காக கஷ்டபடுவோம். நம்ம கஷ்டம் நம்மோடு இருக்கட்டும். நாலு காசு சேர்த்துட்டா அப்புறம் எல்லாரும் ஜாலியா இருக்கலாம்.அந்த ஜாலியிலே நம்மோட கஷ்டமெல்லாம் கரைய்ஞ்சுடும்."
மகன் தனது பெற்றோர்களிடத்தில் பேசும் போது:
"நான் கஷ்டப்பட்டாவது உங்களை கடைசி வரைக்கும் காப்பாத்துறேன். நீங்க எங்க கூட இருக்கிறது யானை பலம் தருது"
கணவன் மனைவியிடத்தில் பேசும் போது:
"மை டியர் உன்னால உடம்புக்கு முடியல்லேன்னா கவலை படாதே. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். எனக்கு உன்னோட ஹெல்த் , சந்தோஷம் ரொம்ப முக்கியம். உனக்கு இப்போ கம்பர்டபில் ரெஸ்ட் தேவை, ரிலாக்ஸ் தேவை. ஒய் பியர் ஐ அம ஹியர் "
அண்ணன் தங்கையிடம் பேசும்போது:
"iஇதோபாரம்மா, அண்ணன் நான் இருக்கிறேன். என்னால முடிஞ்ச அளவு உனக்கு செய்கிறேன். மேலே ஆகவேண்டிய வேண்டிய வேலை என்னான்னு சொல்லு. அதை நான் செய்து முடிக்கிறேன் "
இனிமையாக பேசுங்கள்!
மனித மனங்களில் இடம் பிடியுங்கள்!

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Very Good..
ReplyDelete