அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்
இருட்டான உலகம் எப்படி இருக்கும். கண்கள் நன்றாக தெரிந்தாலும் குருடனாகத் தான் எல்லோரும் செயல்படுவர்.இந்த குருட்டு உலகத்தில் நாட்டுக்கிடையே போர் , கலவரங்கள், உறவுக்கிடையே தீரா சண்டைகள்,நட்புக்கிடையே விரிசல்கள், குடும்பத்தில் கூச்சல்,குழப்பங்கள், குத்து வெட்டு, அடிதடி,பொய் பித்தலாட்டம், கொலை கொள்ளை,லஞ்சம் ஊழல், ஏறி மிதித்து நசுக்கினாலும் கேட்பாரிலா செயல்கள் , இன்னும் தான் எத்தனை எத்தனை ? யாரோ தவறு செய்கிறான்? செய்தவன் எளிதாக தப்பித்துக் கொள்கிறான். ஆனால் கையில் கிடைத்த தவறே செய்யாதவனுக்கு தண்டனை,இப்படித்தான் தான் இனிமேலும் இருக்கும். இப்படி இருக்கின்ற வேளையில் 'இதிலிருந்து தப்புவதற்கு விமோட்சனம் ' கிடைக்காதா? யாராவது நல்ல உலகிற்கு அழைத்து செல்லமாட்டார்களா? என்று ஒரு ஓரத்தில் ஒளி வருகின்றதா? என்று விழிப்புடன் நாலாப் பக்கங்களும் காதையும் கண்களையும் கூர்மையாக்கிக் கொண்டு கவனித்து வருகின்றனர்.
"அதோ ... அதோ...ஒரு ஒளி ! அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்.பலரை கூவி கூவி அழைக்கின்றனர். இந்த நல்ல சந்தர்ப்பம் இனி வராது! பின்னால் ஓடிவாருங்கள் !" என்று பலர் சொல்வதை, எப்போதும் கூச்சல் குழப்பத்துடன் இருக்கும் மனிதனுக்கு எங்கே கேட்கும்?
ஆனால் பார்த்தவர்கள், சுதாரித்தவர்கள் அதன் பின்னே ஓடி ஒளி கொண்ட அருமையான உலகத்திற்கு சென்றனர். சற்று தாமதமாக சுதாரித்தவர்கள் "அடேடே .. நல்ல வாய்ப்பை தவறவிட்டோமே " என்று மறுபடியும் ஓளியை கவனிக்கத் தொடங்கினர். பார்த்த ஒளியின பெருமைகளை பலரிடம் கூறும்போது பலத்த சிரிப்புடன் "ஒளியாவது ! ஒன்னு இருக்கிறதாவது? யாரை ஏமாற்ற பாக்கிறே?" என்று பழையபடி கூச்சல் குழப்பத்தில் மூழ்கினர். ஆனால் அறிந்தவர்களோ மற்றொரு வாய்ப்புக்காக ஏங்கினர்.
இந்த இருட்டு உலகத்தில் மனித பண்பு வளர்த்து நாட்டுக்கிடையே,உறவுக்கிடையே, நட்புக்கிடையே , குடும்பத்திற்க்கிடையே இரக்கம் ,அன்பு,கருணை,பாசம் என்ற ஒளியைக்கொண்டு முடிந்த மட்டும் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஏழை எளிய மற்றும் நல்ல உள்ளங்களின் இன்னல்களை அகற்ற உங்களாலான முயற்சியை தினமும் செய்து கொண்டிருங்கள்.அப்போது தான் இங்குள்ள மக்கள் மகிழ்ச்சிய்டன் வாழ்வார்.இந்த உலகம் காப்பாற்றப்படும்.
இருட்டு உலகை ஞான ஒளி கொண்டு விரட்டுங்கள்.
மனித பண்பை மதியுங்கள்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Good.
ReplyDelete