அனுபவ வாழ்கை பொன் வரிகள் -
மதுரை கங்காதரன்
சாதனைக்கான தேவையும் நேரமும்
எனக்கு மட்டும் இந்த வசதி அந்த வசதிகள் இருந்திருந்தால் இந்த உலகத்தையே ஜெயித்திருப்பேன். அந்த வசதிக்காகவும், நேரத்திக்காகவும் காத்திருக்கிறேன் என்று பலர் பேச கேட்டிருப்பீர்கள். இன்னும் சிலர் எனக்கு பணவசதி இல்லையே என்று புலம்புவதை பார்த்திருக்கிறோம்.
உண்மையில் சாதனையாளர்கள் தாங்கள் சாதிப்பதற்கு எவையெல்லாம் தேவை என்று நினைப்பதற்கு நேரம் இருப்பதில்லை. அவர்கள் தங்கள் கையில் இப்பொழுது என்ன இருக்கின்றதோ (இப்போதுள்ள வசதி) அதை வைத்து எப்படி எதை வைத்து யாரைக்கொண்டு எவ்வாறு நல்ல முறையில் புதிய அரிதான செயல்கள் செய்வதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.
நன்றாக யோசித்துப் பாருங்கள் :
1. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தது அப்போதுள்ள மரக்கட்டைகளைக் கொண்டு கப்பல் கட்டி தான் பயணம் செய்து சாதனை படைத்தார்
2. தாமஸ் ஆல்வா எடிசன் அப்போதுள்ள கம்பி இழைகளைக்கொண்டு 'பலப்' பை கண்டுபிடித்தார்.
3. சச்சின் டெண்டுல்கர் நம்முடைய நாட்டில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி செய்து தான் உலக கிரிக்கெட் உலகில் சாதனை படைத்தார்.
4. அலெக்சாண்டர் கிரஹாம்பெல் அப்போது இருக்கும் கருவிகளைக்கொண்டு தான் டெலிபோன் கருவியினை கண்டுபிடித்தார்.
5. ரைட் சகோதரர்கள் அப்போதுள்ள வசதிகளை கொண்டு தான் விமானம் கண்டுபிடித்தார்.
6. மார்கோனி வானொலி கண்டுபிடிக்கும் போது எனக்கு அந்த வசதி, இந்த வசதி வேண்டும் என்று கூறியதாக சரித்திரம் இல்லை.
7. லூயி பாஸ்டர் மருத்துவ கண்டுபிடிப்பு மிகபெரிய சாதனை.
8. மைக்ரோ சாப்ட் நிறுவனர் , பில் கேட்ஸ் அப்போதுள்ள வசதிகளைக்கொண்டு தான் உலகமே அதிசயிக்கும் வண்ணம் கம்பியூட்டரில் புரட்சி செய்தார்.
9. இந்தியாவின் நோபெல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் அப்போதுள்ள அறிவியல் ஆய்வகத்தை பயன்படுத்தி தான் சாதனை படைத்தார்.
இப்படி இன்னும் பல சாதனையாளர்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆகவே சாதனை செய்வதற்கு இப்போதுள்ள வசதியும் இந்த நேரமும் தான் சரியான நேரம். இப்போதே புறப்படு ; சாதனை படைக்க.
END MEANS EFFORTS NEVER DIES
NO MEANS NEXT OPPORTUNITY
***************************************
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
NO=Next Opportunity. Good..
ReplyDelete