அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்
நீங்கள் வெற்றிக்காக விதையாக புதையத் தயாரா?
வெற்றிக்கான பாடம்
A LIFE SUCCESS LESSON
இதென்ன புது கேள்வி. இந்த கேள்வி ஒரு குரு சீடனிடத்தில் கேட்ட கேள்வி. சரியாக சொல்லப் போனால் ஒரு பயிற்சியாளர் தன்னுடைய மாணவர்களிடம் கேட்ட கேள்வி?
"நீங்கள் மட்டும் விதையாக மாறத் தயாராக இருந்தால் மற்றவை நான் பார்த்துக்கொள்கிறேன் " என்றார் ஒரு பயிற்சியாளர் .
"அதாவது விதையின் பாடத்தை தெரிந்து கொள்ளுங்கள். தண்ணீரில் நனைந்த விதையை மண்ணில் புதைத்து அந்த இடத்தில் தேவையான தண்ணீர் ஊற்றவேண்டும். (மண்ணில் புதையாத விதை ஒருபோதும் அற்புதங்களை நிகழ்த்தாது. புதைத்த விதைக்கு எங்கிருந்துதான் பலம் கிடைக்கிறதோ தெரியாது . தண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்ட விதை முளைவிட்டு தன முழு பலத்துடன் மண்ணின் கற்களின் பலத்தையும் தாண்டி வெளியே வந்து முளைவிட்டு காற்றையும் சூரிய சக்தியையும் தேடி எடுத்த்க்கொள்கிறது.அந்த செயல் சாதாரணமான காரியம் கிடையாது. எல்லாச் சக்திகளும் தனக்கு கிடைக்கும் போது பலவித அற்புதங்கள் நிகழ்கிறது. அது ஆச்சரியம் / அதிசயம் தான். அதன் பலன் அது வளர்ந்து பூக்கள் தந்து அதிலிருந்து நமக்குத்தேவையான நல்ல காய் கனிகளாக மாறும் வித்தை நிகழ்கிறது.
இதற்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்.
நீங்கள் வாழ்கையில் முன்னேற வேண்டுமானால் முதலில் புதைபட வேண்டும். அதாவது உங்களுக்கு ஏற்பட்ட தோல்விகள், சுற்றியிலும் இருக்கும் கஷ்டங்கள், இன்னல்கள், தேடி வரும் விமர்சனங்கள் ஆகியவற்றை எதிர் கொண்டு அவற்றை புதைத்து விடவேண்டும். அதன் மூலம் தான் உங்களுக்கு அபரீதமான பலம் கிடைக்கும். அந்த பலம் தான் உங்கள் வெற்றி மரத்திற்கான முளை. தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது போல் பயிற்சியும் உழைப்போடு விட முயற்சி செய்யும் போது நம்பிக்கை (காற்று) மற்றும் தன்னம்பிக்கை (சூரிய ஒளி ) தானாகவே வந்துவிடும். பிறகென்ன? அவைகளே உங்கள் கையில் வெற்றிகனிகளாக மாற்றும் அற்புத சக்தியை தந்துவிடும்.
விதையாக புதை பட தயங்காதீர்கள் !
தோல்விகளை கண்டு துவண்டுவிடாதீர்கள் !
கடின முயற்சியோடு பயிற்சி செய்யுங்கள் !
அதுதான் உங்கள் வாழ்க்கைக்கான வெற்றிக்கனி !
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment