Saturday, 25 August 2012

உன்னிடம் இருக்கும் மூலதனம்- KNOW YOUR PERMANENT PROPERTY - அனுபவ பொன் வரிகள்


அனுபவ பொன் வரிகள் 


மதுரை கங்காதரன் 


உன்னிடம் இருக்கும் மூலதனம் 


ஒரு சமயம் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்க்கான ஆயுத்தம் செய்ய வேண்டியதாயிற்று. எப்போதுமே நான் நடத்தும் பயிற்சி வகுப்பில் செய்முறை விளக்கம் இருக்கும்.அப்போது தான் எல்லோருக்கும் எளிதாக மனதில் பதியும். அன்றைய தினத்தில் நான் கேட்டபொருள் பெரிய இரம்பம், சுத்தியல், திருப்புளி,கட்டிங் பிளேயர், டிரில்லிங் மெஷின் போன்றவை அனைத்தும் மேஜையில் வைத்து வகுப்பை ஆரம்பித்தேன்.


மேஜையில் உள்ள பொருட்களை பார்த்தவுடன் சற்று முழிப்புடன் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். ஒவ்வொன்றும் காட்டி அதன் செயல்பாடுகளை விவரித்தேன். "இந்த இரம்பம் மிகவும் கூர்மையான புற்கள் கொண்டது.எளிதாக கடித்து துப்பிவிடும்.இந்த  சுத்தியலால் ஒரே போடு போட்டால் சுக்கு நூறாகிவிடும்., திருப்புளியால் இலேசாக ஒரு திருகு கதை ஓவர். கட்டிங் பிளேயரால் ஒரு பிடுங்கு கையேடு வந்துவிடும். இந்த  டிரில்லிங் மெஷினால் எதையுமே துளை போட்டுவிடலாம். இதை வைத்துக்கொண்டு ஒரு பெரிய அறுவை சிகிச்சை பண்ணப் போகிறேன். ஆனால் இரத்தம் வராமல்! அனைவரும் நன்றாக கவனியுங்கள்" என்றேன்..


ஒருவரை கூப்பிட்டு "உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது" என்று கேட்டேன். அதற்க்கு "நூறு ரூபாய் " என்று பதிலளித்தார்.
இதை வைத்துக்கொண்டு பெரிய சாதனை செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு "முடியாது " என்று பதிலளித்தார்.
"ஏன்?"
"அதற்கு நிறைய மூலதனம் வேண்டும் "
"அப்படியா ? உன்னிடம் இருப்பதை கேட்டால் விலைக்குத் தருவாயா? "
"ஒ..தருவேன்"
"சரி" என்று சொல்லியவாறே இரம்பத்தை எடுத்தேன்."நான் உனக்கு பத்தாயிரம் தருகிறேன் உனது வலது கை மட்டும் தருவாயா? "" என்று கேட்டேன்.
உடனே "முடியவே முடியாது. அது இல்லாமல் எந்த வேலையும் செய்ய இயலாது " என்றார்.

"அது போகட்டும் ஐம்பதாயிரம் தருகிறேன்.உனது கண்களை டிரில் போடட்டுமா? "

"நான் மாட்டேன் . கண்கள் இல்லாமல் எதையும் பார்க்க முடியாது".

"சரி ஒரு லட்சம் தருகிறேன். சுத்தியலால் உன் மண்டையை ஒரேபோடு போட்டு சுக்கு நூறாகட்டுமா? "

"நல்லா இருக்கே, அப்படி செய்தால் என் உயிர் போய்விடும். பிறகு என் குடும்பத்தின் நிலைமை என்னாவது? " என்று சற்று ஆத்திரப்பட்டார்.

"உனது ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி " என்று அவரை உட்காரவைத்தேன்.

"இதிலிருந்து தெரிகின்றதா ? உங்களிடம் எவ்வளவு மூலதனம் இருக்கின்றது என்று! உங்களுடைய ஆரோக்கியமான, திடகாத்திரமான உடம்பே உங்களுக்கு கிடைத்திருக்கும் விலை மதிப்பில்லா மூலதனம்.இதை கொண்டு எவ்வளவோ சாதனை செய்யாலாம்." என்று முடித்தேன்.

இப்போது உங்கள் அருமையை உணர்ந்தீர்களா? 

உலகை வெல்ல இப்போதே புறப்படுங்கள்! 


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

      

No comments:

Post a comment