Monday, 13 August 2012

புதையலின் வரைபடம் - உன்னைத் தேடி வரும் சந்தர்ப்பங்கள் - CATCH YOUR OPPORTUNITY


அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்

புதையலின் வரைபடம் 

உன்னைத் தேடி வரும் சந்தர்ப்பங்கள்
நல்ல சந்தர்ப்பங்கள் உங்களை சுற்றிலும் இருக்கின்றது. அதற்காக எப்போதும் விழிப்புடன் இரு. சிலர் சந்தர்ப்பங்களைத் தேடிப்  போகிறார்கள்.சிலர் சந்தர்ப்பங்களை தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலருக்கு சந்தர்ப்பம் தானாக அமைகிறது. சிலர் சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கின்றனர். சிலர் சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதை உபயோகிக்க தவறிவிடுகிறார்கள். சிலரோ அதை சோம்பேறித்தனத்தால் அலட்சியப்படுத்தி விட்டு அதை விட பெரிய சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பேராசையினால் பரிதவிக்கின்றனர். இப்படி பலருக்கு பல ரூபத்தில் சந்தர்ப்பங்கள் கிடைத்தும் தெளிவான சிந்தனையில்லாமல் பொன்னான பல வாய்ப்புகளை வீணடித்துவிட்டு  வாழ்கையில் நிமதியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறனர்.


  

சந்தர்ப்பங்களை நழுவவிடாதே !
மீண்டும் கிடைப்பது அபூர்வம் !
அது தான் உன் உயர்வுக்கு அடித்தளம் !

                    

ஒருவன் தன வாழ்நாளில் செல்வங்களை சேர்ப்பதற்கு சந்தர்ப்பத்தை தேடித்தேடி ஓய்ந்து போனான்.அவனைச்சுற்றி பலர் ஏதோ தேடிக்கொண்டிருந்தனர். என்ன செய்கிறீர்கள் என்று கூட அவன் கேட்கவில்லை.   கடைசியில் கடவுளிடம் மன்றாடினான். வேறுவழியில்லாமல் கடவுள் மனமிறங்கி அவன் முன் காட்சியளித்தார்.

அவரிடத்தில் "தன்னைச்சுற்றிலும் யார் எதை தேடிகிறார்கள்" என்று  கேட்டான்.
"அதுவா , அவர்களும் உன்னைப்போல் புதையலை தேடிக் கொண்டிருக்கின்றனர்.இவர்களுக்கு நான் எந்த உதவியும் செய்யவில்லை. சிலர் அவர்களாகவும், சிலர் பிறர் சொல்லி கேள்விப்பட்டும் தேடுகின்றனர். உனக்குத்தான் நான் உதவி செய்ய வந்திருக்கிறேன் " என்றார்.

அவர் சொன்னதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்   அவன் தனது ஆசையை விவரித்தான்.

"மகனே ! உனது ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக நான் உனக்கு அருமையான சந்தர்ப்பத்தை தருகிறேன். இதோ அந்த சந்தர்ப்பம்  " என்று கடவுள் அவன் கையில் ஒரு பேப்பரை திணித்தார்.

                   

அதை பிரித்துப் பர்ர்தான். அதில் ஏதோ வரைபடம் ஒன்று இருந்தது.படித்துப் பார்த்தான். அதை புரிந்து கொள்ள பிடிக்காதவனாய் நாலு பேரிடத்தில் கேட்க சோம்பேறித்தனப்பட்டு மீண்டும் கடவுளைக் கூப்பிட்டான். 

"என்னை எதற்காக கூப்பிட்டாய் ?"

"இல்லை , இந்த வரைபடத்தில் என்ன இருக்கின்றது என்பதை விளக்கிச்சொல்ல வேண்டும் "என்றான்.

    

"அப்படியா, இந்த வரை படத்தில் 'புதையல் ' இருக்குமிடம்     குறிக் கப்பட்டுள்ளது. அதாவது இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்றால் ஒரு சிறிய மலை வரும். அந்த மலைக்கு பின்னால் பெரிய புதையல் பூமி இருக்கின்றது. உனக்கு அளித்திருக்கும் இடத்தின் எண்  6169.அங்கு பத்து அடி தோண்டினால் நீ விரும்பிய புதையல் கிடைக்கும் " என்று சொல்லிவிட்டு மறைந்தார்.


அவனும் ரொம்பவே மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்தான். பாதை கரடுமுரடான, மேடுபள்ளம் மற்றும் கல்லும்முள்ளுமாக இருந்தது.அங்கே இவனைப்போல் பலர் அய்யோ அப்பா என்ற அலறலுடன் கடந்து கொண்டிருந்தனர். சிலர் வலியை மனதில் தாங்கிக்கொண்டு அமைதியுடன் நடந்து கொண்டிருன்தனர். அவன் எண்ணத்தில் 'இவர்கள் யார் சொல்லி எங்கு சென்று கொண்டிருக்கின்றனர் ' என்று புரியாமல் மீண்டும் கடவுளை அழைத்தான். அவர்கள் நடப்பதன் காரணத்தை கேட்டான்.

"அவர்களா ! அவர்களும் உன்னைப்போல் புதையலை தேடிச் செல்கிறார்கள். அது போகட்டும்.உனக்கு என்ன வேண்டும் கேள் "
" எனக்கு நீங்கள் இந்த ஐந்து கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு உதவி செய்ய வேண்டும் " என்றான்.
"சரி " என்று அவனை தூக்கிக்கொண்டு  அந்த தூரத்தை கடக்க உதவி செய்தார்.
அடுத்து வந்த மலையை பார்த்து மலைத்துப் போனான். அங்கும் பலர் மலையை கடந்துகொண்டிருந்தனர்

    
.
மீண்டும் கடவுளை கூப்பிட்டு அந்த மலையை கடப்பதற்கு உதவி செய்யுமாறு வேண்டினான்.
அவரும் மலையை கடக்கச்செய்தார்.
புதையல் பூமியை பார்த்தான். அங்கும் பலர் குழி தொண்டிகொண்டிருன்தனர். சிலர் புதையலை தோண்டியெடுத்து மகிழ்ச்சியுடன் திரும்பிகொண்டிருன்தனர்.

     

அவனுக்கு கிடைத்திருக்கும் 6169 எண்ணில்  ஐந்து முறை கூட கொத்தியிருக்கமாட்டன். வலிக்கு பயந்து மீண்டும் கடவுளை கூப்பிட்டான்.
அவரும் வந்தார். குழியை தோண்டினார். புதையல் தட்டும் ஒலியை கேட்டான். அவர் அவனைப்பார்த்து 'இப்போதாவது புதையலை எடுத்துக்கொள்கிறாய? ?' என்றார்.
   
     
"அதையும் நீங்களே எடுத்து என்னிடம் கொடுத்து விடுங்கள் " என்றான். அவரும் அதை அவனிடத்தில் கொடுத்துவிட்டு அந்த இடத்தை காலிசெய்தார்.
அவன் ஆசையுடன் புதையல் பெட்டியை திறக்கப்போனான். பெட்டியில் மேல் ஏதோ எழுதியிருந்ததை வாசித்தான். அதில் எந்த எந்த வேலை செய்ததற்கு எவ்வளவு பங்கு கிடைக்கும் என்று குறிப்பிட்டுருந்தது.

ஐந்து கிலோ மீட்டர் தூரம் கடந்தவனுக்கு    = 25 %

மலையை கடந்தவனுக்கு                                      = 25 % 

புதையல் குழியை தோண்டியவனுக்கு           = 25 % 

புதையலை எடுத்தவனுக்கு                                   = 25 %

என்றிருந்தது.

      

அவன் சற்று யோசித்தான். இவற்றில் எந்த ஒரு வேலையும் செய்யவில்லை. அதனனல் அவனுக்கு 0 % தான் கிடைக்கும். ஆனாலும் ஒரு நப்பாசையுடன் ஏதாவது கொஞ்சமாவது கிடைக்குமா ? என்று ஆசையுடன் பெட்டியை திறந்தான். அது வெற்றாக இருந்தது. கூடவே ஒரு சிறிய காகிதத்துண்டு இருந்தது. ஏதோ எழுதியிருந்தது.
அதை படித்து தலையிலடித்துக் கொண்டான். அதன் வாசகம் ..

 

பல சந்தர்பங்கள் கிடைத்தும், உதவி இருந்தும் நீ அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இனியாவது சோம்பேறித்தனமாக இல்லாமல் விடா முயற்சியோடு விழிப்புடன் உனக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நன்றாக பயன்படுத்திக்கொள்.நீ நிச்சயம் வாழ்கையில் முன்னுக்கு வருவாய்,     

***************************************************   

இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com   

            


               

No comments:

Post a comment