அனுபவ வாழ்கை பொன் வரிகள் -
மதுரை கங்காதரன்
மாற்றத்திற்கு நீங்கள் அடிமையானவர்களா?
இன்றைய கால கட்டத்தில் மாற்றங்கள் என்பது எப்படி புகை பிடித்தலுக்கும்,மது போதைக்கு அடிமையாவது போல மாற்றங்களுக்கும் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம். அதையே பெருமையாகவும் பீற்றிக்கொண்டு மற்றவர்களை உசுப்பேற்றி அவர்களையும் அடிமையாக்கும் நிலைமைக்கு தள்ளிக்கொண்டி இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் மறைமுகமாக நஷ்டமடைந்து தங்களுடைய வாழ்க்கை தரம் குறைந்துகொண்டே போவதை உணரத்தவருகின்றனர்.
மாற்றத்தை பலர் தவறாக புரிந்துகொண்டு அதை ஒரு சமுதாய அந்தஸ்து என்று கருதி தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டும், ஏமாந்து கொண்டும் வருகின்றனர். அரசு வங்கிகளும் மற்றும் பல தனியார் வங்கி , நிதி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு மக்களுக்கு பொருட்களை வாங்குவதற்கு கடன் வழங்கி ஊக்கப்படுத்தின் மூலம் அவர்களை தங்களுடைய நிரந்தர அடிமையாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
தினமும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மாற்றங்கள் தேவைதான? என்பதை கீழ்க்கண்டவைகளை படித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள்.
மொபைல் :
நாளுக்கு நாள் வித விதமாக, பலவித பெயர்களில், மாடல்களில், கலர்களில், சைஸ்களில் கடைகளில் வந்து குவிகின்றது. கண்களை கவரும் பகட்டான, பரப்பரப்பான விளம்பரங்கள். அதைப் பார்த்து சிலர் தாங்கள் போன மாதம் வைத்திருக்கும் மொபைல் நன்றாக வேலை செய்திருந்தாலும் அதை ஓரம்கட்டி புதிதாக வேறு மொபைலை வாங்கி மற்றவர்களிடம் காட்டி 'பந்தா' பண்ணுகிறார்கள்.அதனால் யாருக்கு என்ன லாபம்? மாறுபவர்கள், மாற்றுபவர்களுக்கு பணத்தை கொடுத்து பழைய மொபைல் போல ஆனால் சற்று கூடுதல் வசதியுள்ள மொபைல் வேறு கலரில் வாங்கி பணத்தை வீணடித்துகொண்டு இருக்கிறார்கள். இதில் என்ன கூத்து என்றால் எந்த மொபைல் போனிலும் 100 % வசதிகளை உபயோகிப்பார்களா? என்றால் 'இல்லை' என்ற பதில் தான் வரும். ஆரம்பத்தில் எப்.எம்.ரேடியோ, வீடியோ, போட்டோ, பாட்டு நெட்டு என்று 'அலப்பரை' செய்தவர்கள் இப்போது பெரும்பாலும் எஸ்.எம்.எஸ் யில் 90% ம் , பேச்சில் 10% ம் மட்டுமே உபயோகிக்கின்றனர். பிறகு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து ஏன் கூடுதல் வசதிகொண்ட மொபைல் வாங்கவேண்டும்? அதிக பணம் இருக்கின்றதாலா? இதை பயன்படுத்தி மொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை 'ஒன்ஸ் துரோ' அதாவது ஒருமுறை மட்டுமே உபயோகிப்பது. ஏதேனும் ரிப்பேர் ஆகிவிட்டால் தூக்கிப் போட்டுவிட்டு புதுசு வாங்கிவிடச் செய்கின்றனர். இந்த மாற்றம் ஆரோக்கியமான மாற்றமா? இதற்க்கு நாம் ஒத்துழைப்பது எப்படிப் பட்டது?
மோட்டார் பைக்குகள்:
வாங்கி ஓரிரு வருடங்கள் கூட ஆகியிருக்காது. கவர்ச்சியான விளம்பரத்தை பார்த்து புது சேஸ் , புது பெயர், புது கலர்ரென்று 'டர்ரு புர்ரு' பறக்க வேண்டும் என்ற ஆசையில் கையில் வைத்திருக்கும் நல்ல பைக்கை பாதி விலைக்கும் குறைவாக விற்று அதிக விலையில் கடனில் மாற்றம் என்ற பெயரில் புது பைக்கை வாங்கினால் யாருக்கு லாபம்? இதன் காரணம் என்று தானோ என்னவோ புதுப் பொருட்கள் முன்பு போல் பத்தாண்டு , இருபதாண்டு என்று உழைக்காமல் சீக்கிரமே சில நாட்களிலே சில உதிரி பாகம் கட்டாயம் மாற்ற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றது. பெரும்பாலும் குறைந்த உழைப்புள்ள உதிரி பாகங்களை போட்டு புது தயாரிப்புகளை தயாரித்து சந்தைக்கு அனுப்புகிறார்கள். ஏனென்றால் புதிய வரவுகளை சீக்கிரமே விற்றால் தான் லாபம் கிடைக்கும் சந்தையில் நிலைத்து நிற்க முடியும். புதிது என்றும் தரம் குறைந்த பொருளைத் தான் நாம் வாங்குகின்றோம். சில வேளைகளில் பழைய பொருட்களையே புதிதாக்கி காசு அதிகம் பார்க்கின்றனர்.
இது மட்டும் தான? புது கார்கள், கணினிகள், டி.வி, வீட்டு உபயோக சாமான்கள் பலவும் ஏன் சேலைகள், சுடிதார்கள் என்று எதுவும் விட்டு வைக்காமல் மாற்றங்களுக்கேற்ப மக்கள் பணத்தை வீணடிக்கின்றனர்.
அது ஒருபுறம் இருக்க சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் மாற்றம் என்கிற பெயரில் ஒரே மாதிரியான செய்திகள், படங்கள், பாட்டுகள், சீரியல்கள், புதுமை என்ற பெயரில் உருபிடியில்லாத நிகழ்சிகள் என்று புது புது சேனல் என்ற பெயரில் புது நடிக, நடிகர்களை வைத்துக்கொண்டு மறைமுகமாக பணம் பறிக்கின்றனர். இது மாற்றமா?
இத்தகைய மாற்றம் கல்வியில் கூட விட்டு வைக்கவில்லை. சின்னவனுக்கு இன்ஜினீயரிங் படிப்பா? எனக்கு மட்டும் ஆட்ஸ் படிப்பா? (இவன் படிக்கும் போது அவ்வளவாக இன்ஜினீயரிங் படிப்பு இல்லை! அதனால் சொந்த தம்பி தங்கை களிடம் பொறாமை கொள்ளலாமா? இதுமட்டுமா? எனக்கு இந்த மொபைல் அவனுக்கு லேட்டஸ்ட் மொபைலா? அல்லது பைக்கா? இன்னும் எத்தனயோ?
ஆட்சியில் கூட மாற்றம் செய்யப்ப்போகிறோம் என்று பல நாட்டில் (இங்கு உள்பட) தலைவர்களை மாற்றி ஆட்சி பதவியினை கொடுத்தனர். தலைகள் மாறியது தவிர மாற்றம் செய்த மக்களின் வாழ்க்கை தரம் போக போக மோசமாகித்த்தான் வருகின்றன. இப்போது சொல்லுங்கள் மாறச் சொல்பவர்கள் தான் அதிகம் ஆதாயம் அடைகின்றனர். இப்படி மாற்றம் தேவைதான?
இத்தகைய மாற்றங்கள் குடும்பத்தில் போட்டி, பொறாமையை வளர்த்து குடும்ப உறவுகளை, நட்புகளை சின்னா பின்னாமாக்கிக் கொண்டிருக்கின்றது.
கடைசியாக மாற்றம் என்பது உனது வாழ்க்கை தரத்தையும் அந்தஸ்தையும் உயர்த்துவதாக இருக்கவேண்டும். அது கட்டாயம் ஆரோக்கியமானதாகவும், எவருக்கும் கெடுதல் செய்யாமல் நமது உறவுகளை நீடித்திருக்கும் பாலமாக விளங்கவேண்டும்.
மாற்றத்திற்கு ஒத்துழைப்பீர் !
அது கட்டாயம்
ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்!
***************************************************************************
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது