அனுபவ வாழ்கை பொன் வரிகள் -
மதுரை கங்காதரன்
நீங்கள் விரும்பும் வாழ்க்கை அமைய வேண்டுமா?
வாழ்க்கை என்றால் மேடு, பள்ளம் இருக்கத்தான் செய்யும். அது ஒவ்வொருவருடைய அறிவை பொருத்தும் செயலின் தன்மை பொருத்தும் உன்னுடைய உயர்வு, தாழ்வு அமையும். ஆனால் எல்லோரும் எப்படியாவது உயர்வை அடைந்துவிடவேண்டும் துடிக்கிறார்கள். ஏன்! கனவிலும் கூட. உயந்துவிட்டால் ஜாலியாக இருக்கலாம். நினைத்தது செய்யலாம். நினைத்தபடி நடக்கலாம்.
ஆனால் நடைமுறை வாழ்கையில் பலர் நேரிடையாகவோ , மறைமுகமாகவோ பல நேரங்களில் இறக்கங்களை அனுபவித்து அல்லல்பட்டுகொண்டிருக்கிறார்கள். இது எதனால் ஏற்ப்படுகின்றது? என்று கேட்டால் உடனே 'திட்டமிடாமை, அனுபவமின்மை, விழிப்புர்ணவு இன்மை ' போன்றவை காரணமாக வரும். இவைகள் நடுத்தர மற்றும் கீழ்தர வர்கத்தினருக்கும் தான் பொருந்துமா ? என்று கேட்டால், இது எல்லா வர்கத்தினருக்கும் பொருந்தும். பலர் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். எல்லோரும் கிட்டத்தட்ட அதி சொகுசான பகட்டு வாழ்கையைத் தான் விரும்புகிறார்கள். அதை அடைய, அனுபவிக்க தங்களுடைய நிலைமையை மறந்த அந்த இனிமை வாழ்க்கையினை பறந்து பிடிக்க பலவகைகளில் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த பலவீனத்தை நன்றாக பயன்படுத்தி அவர்களுக்காகவே தனியார்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் பலவற்றின் மீது கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து கடன் வழங்கி மக்களை உள்ளுக்குள் ஆண்டியாக்கி வெளியே ராஜா வேஷம் கொடுத்து தினமும் 'வட்டி, வட்டி' என்று பயமுறுத்தி நிம்மதியில்லாமல் செய்து வருகிறார்கள். அதில் நன்றாகவே வெற்றியும் அடைந்திருக்கின்றார்கள்.
அனைவரும் தங்களுடைய கனவு இலட்சியங்களை நீண்ட நாட்கள் அனுபவிக்க எண்ணுகிறார்கள். அதனை எப்படியாவது அடைந்துவிடுகிறார்கள் ஆனால் சிறிது நாட்களுக்குள் அவர்களின் கனவுகோட்டை இடிந்து பழைய நிலைமைக்கும் கீழாக வந்து கஷ்டப்படுகிறார்கள். எப்படி சிலர் மட்டும் தங்களுடைய நிலையை கீழிறங்காதவாறு பார்துக்கொள்கிறார்கள். அதன் ரகசியம் இதோ..
மொபைல் கடை உரிமையாளர்கள் பெரும்பாலும் விலை குறைந்த பழைய மொபைல்களையே உபயோகிப்பதை கவனியுங்கள்.
தங்க நகை கடை முதலாளிகள் பெரும்பாலும் ஒரு குண்டுமணி நகை கூட அணிந்திருக்க மாட்டார்கள்.
பெரிய ஜவுளி கடை உரிமையாளர்கள் எப்போதும் எளிய உடைகளையே அணிந்திருப்பார்கள்.
கார் ஷோரூம் வைத்திருப்பவர்கள் டூ வீலரில் வருவார்கள்.
ஸ்வீட் கடை வைத்திருப்பவர்கள் அதை ருசித்துகூட பார்த்திருக்கமாட்டார்கள்.
இன்னும் பல உதாரணங்களை சொல்லலாம்.
அதாவது உங்களுக்கு தேவையில்லாத பொருளை ஆசைக்காகவோ, பகட்டுகாகவோ வாங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தேவையுள்ள பொருளை உபயோகத்தை பொறுத்து வாங்கினாலே போதுமானது.
உதாரணமாக
'எக்ஸ்ட்ரா பிட்டிங்' அதிக விலை கொடுத்து விலை உயர்ந்த டூ வீலரை வாங்குவது..
அதிக விலை கொடுத்து மொபைலை அடிக்கடி மாற்றுவது...
விலை உயர்ந்த கார் வாங்குவது...
விலை உயர்ந்த ஹோட்டலுக்கு செல்வது...
பகட்டான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது...
உங்களது எண்ணம் அந்த மாதிரியாக மாறிவி டாமல் தேவைக்கு தகுந்தார்ப்போல் முடிந்தளவு ரொக்கத்தை கொடுத்து வாங்குங்கள். பலருடைய வருமானம் வட்டியில் தான் வீணாகிறது.
அனைவரும் தங்களுடைய கனவு இலட்சியங்களை நீண்ட நாட்கள் அனுபவிக்க எண்ணுகிறார்கள். அதனை எப்படியாவது அடைந்துவிடுகிறார்கள் ஆனால் சிறிது நாட்களுக்குள் அவர்களின் கனவுகோட்டை இடிந்து பழைய நிலைமைக்கும் கீழாக வந்து கஷ்டப்படுகிறார்கள். எப்படி சிலர் மட்டும் தங்களுடைய நிலையை கீழிறங்காதவாறு பார்துக்கொள்கிறார்கள். அதன் ரகசியம் இதோ..
மொபைல் கடை உரிமையாளர்கள் பெரும்பாலும் விலை குறைந்த பழைய மொபைல்களையே உபயோகிப்பதை கவனியுங்கள்.
தங்க நகை கடை முதலாளிகள் பெரும்பாலும் ஒரு குண்டுமணி நகை கூட அணிந்திருக்க மாட்டார்கள்.
பெரிய ஜவுளி கடை உரிமையாளர்கள் எப்போதும் எளிய உடைகளையே அணிந்திருப்பார்கள்.
கார் ஷோரூம் வைத்திருப்பவர்கள் டூ வீலரில் வருவார்கள்.
ஸ்வீட் கடை வைத்திருப்பவர்கள் அதை ருசித்துகூட பார்த்திருக்கமாட்டார்கள்.
இன்னும் பல உதாரணங்களை சொல்லலாம்.
அதாவது உங்களுக்கு தேவையில்லாத பொருளை ஆசைக்காகவோ, பகட்டுகாகவோ வாங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தேவையுள்ள பொருளை உபயோகத்தை பொறுத்து வாங்கினாலே போதுமானது.
உதாரணமாக
'எக்ஸ்ட்ரா பிட்டிங்' அதிக விலை கொடுத்து விலை உயர்ந்த டூ வீலரை வாங்குவது..
அதிக விலை கொடுத்து மொபைலை அடிக்கடி மாற்றுவது...
விலை உயர்ந்த ஹோட்டலுக்கு செல்வது...
பகட்டான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது...
ஆகவே செலவுக்கு திட்டமிடுங்கள்.
விழிப்புணர்வோடு எந்த பொருளையும் வாங்குங்கள்.
கட்டாயம் நீங்கள் விரும்பும் வாழ்க்கை வாழலாம்.
*****************************************************
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Very helpful
ReplyDelete