Pages

Saturday 1 September 2012

A SIMPLE WAY- CHANGE YOUR BIG PROBLEM TO SMALL - பெரிய பிரச்சனைகளை சிறியதாக்கும் வழி

அனுபவ பொன் வரிகள்

 


மதுரை கங்காதரன் 


பெரிய பிரச்சனைகளை சிறியதாக்கும் வழி -


A SIMPLE WAY- CHANGE YOUR BIG PROBLEM TO SMALL


நீங்கள் உங்கள் கையளவு உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கரையும் வரை கரையுங்கள். கரையாமல் சிறிதளவு உப்புமிருக்கும். அது பரவாயில்லை. பிறகு உங்கள் விரலால் ஒரு சொட்டு அந்த உப்புத் தண்ணீரை வாயில் வைத்துப் பாருங்கள். சுவை எப்படி இருக்கின்றது? அதிகமாகவே உப்பு கரிக்கும். இந்த நிலையில் உங்களால் அந்த டம்ளர் முழுவதுமுள்ள தண்ணீரை குடிக்க முடியுமா? முடியவே முடியாது ! அது தானே உங்கள் பதில். சரி ...



அதே அளவு உப்பை ஒரு குளத்தில் கரையுங்கள். உப்பு இருக்குமிடம் தெரியாமல் போகிறது. இப்போது குளத்தில் இருக்கும் தண்ணிரை ஒரு டம்ளருக்கு மேலும் குடிக்க உங்களால் முடியும். அதன் சுவை கூட இந்த உப்பால் மாறியிருக்காது.

அதுபோல பிரச்சனை என்பது உப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி பிரச்சனைகளை எதிர் கொள்ளும்போது உங்களுடைய எண்ணங்களும் செயல்களும் குளம் போல விசாலமாக்கிக் கொண்டால் எவ்வளவு பெரிய  பிரச்சனைகள் கூட இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். 


அதை விட்டுவிட்டு பிரச்சனை வரும்போது அதை டம்ளர் போல  குறுகிய மனப்பான்மையோடு எதிகொண்டால் மிகச் சிறிய பிரச்சினை கூட உங்களுக்கு பூதம் போல் நின்று பயமுறுத்தி கொண்டிருக்கும். அதை உங்களால் அவ்வளவு எளிதாக தீர்க்கமுடியாது.

இன்னொரு வகையில் சொல்லப் போனால் எந்த ஒரு சிறிய அல்லது பெரிய பிரச்சினை வந்தாலும் அதை உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தின் மேல் அக்கறை கொள்ளும் நபர்களிடம் குளத்து தண்ணீர் போல பகிர்துகொள்ள தவறாதீர்கள். அப்படி செய்யும் போது உங்கள் பிரச்சினை பல பகுதிகளாக பிரிக்கப்படும்போது பிரச்சினை சிறியதாகி  வெகுவிரைவில் சுலபமாக தீர்க்கப்பட்டு இருக்கின்ற இடம் தெரியாமல் போய்விடும் .

அதே பிரச்சினையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் டம்ளர் உங்களுடனே வைத்துக்கொண்டால் அதுவே உங்களுடைய வாழ்க்கை முழுவதும் பரவி  பாரமாக மாறி உங்களது வளமையான சந்தோஷத்தையும் வாழ்கையும் பாழாக்கிவிடும்.

பிரச்சினையின் போது எண்ணங்களை விரிவுபடுத்துங்கள் !


நல்லோரிடம் பகிர்த்து கொள்ளுங்கள் !


அதுவே பிரச்சினையை தீர்க்கும் எளிய வழி  !


இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 







1 comment:

  1. A very big message explained in a very simple and easy to understand way.

    ReplyDelete