Monday, 10 September 2012

கோபம் ஸ்பெஷல் - ANGER SPECIAL - அனுபவ பொன்வரிகள் மதுரை கங்காதரன்

அனுபவ பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 


கோபம்   ஸ்பெஷல்
ANGER SPECIAL 


நீங்கள் கோபப்படும் ஒவ்வொரு நிமிடமும் 60 வினாடிகளின் மகிழ்ச்சியை இழக்கிறீர்கள்.

ஒருவர் கோபப்படும்போது அவர் திறமை, மதிப்பு, சந்தோசம், நிம்மதி மற்றும் ஆரோக்கியத்தையும் இழக்க நேரிடுகிறது. இத்தனையும் இழக்க நீங்கள்  கோபப்படுவது அவசியம் தானா? கோபத்தை கட்டுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அவற்றில் எளிதானது ஓன்று இதோ. உங்களுக்கு முன் சிறிய கண்ணாடி வைத்துக்கொள்ளுங்கள். கோபப்ப்படு முன் அல்லது கோபத்தின்போது உங்கள் முகம் எந்த மாதிரியாக,  சில சமயத்தில் எவ்வளவு கடுமையாக , கொடூரமாக மாறுகின்றது என்பதை தெரிந்து புரிந்து கொள்ளுங்கள். கோபத்திற்கு முன் இருந்த சாந்தமான முகம்   எங்கே போனது? கொடூரமான மிருக குணம் எங்கிருந்து வந்தது. 


கோபத்தினால் உங்களுக்கு நஷ்டம் தான் கிடைக்கும் ஒழிய லாபம் ஒருபோதும் அடையமாட்டீர்கள். அப்படி லாபம் அடையலாமென்றால் இந்நேரம் 'கோபப்படுவது எப்படி ?' 'கோபத்தினால் லாபமடைவது எப்படி?' என்று பலவித தலைப்புகளில் புத்தககங்கள் உலா வந்திருக்கும். அப்படிப்பட்ட புத்தகம் உங்கள் வாழ்நாளில் படித்ததுண்டா? அல்லது யாராவது இதைப்பற்றிய அறிவுரை கூறுகிறார்களா? 

கோபம் உங்களுக்குள் இருக்கும் மாயப் பிசாசு, சைத்தான், அரக்கன், கெட்ட  மனிதன், பேய் இன்னும் பல பெயர்கள். அவைகள் உயிர் வாழ்வது உங்களுக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்கள் மற்றும் சிலரின் செயல்களும் சொற்களும்.


அதில் முன் கோபக்காரர், பின் கோபக்காரர். இப்படியும் சிலர் இருக்கிறாகள். சிலரோ எப்போதும் கோபக்காரர்கள். அவர்களிடம் பணிவாக கேட்டாலும் 'வள் வள் 'என்று எரிந்து விழுவார்கள். கோபப்படுவது தான் தனக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் என்று நினைப்பது 100% தவறு. கோபம் உங்களது பலவீனம். உங்களது அறியாமை மற்றும் இயலாமையை வெளிப்படுத்தும் செயல். சிலநேரத்தில் நீங்கள் தப்பித்துக் கொள்ளும் வழி . இத்தகைய செயல்கள் எந்தவிதத்திலும் உங்களுக்கு எப்போதும் உதவே உதவாது.

உங்களுடைய கோபம் மற்றவர்களுக்குச் சில நேரங்களின் சாதகமாகவும், கோபம் காரணமாக பலர் உங்களிடத்தில் பலகாரியங்களை மிக எளிதாக சாதித்து விடலாம். ஏனெனில் நீங்கள் கோபம்கொள்ளும்போது உங்களுடைய சுயசிந்தனை, சுய நினைவு, சுயபுத்தி, சுயமான குணத்தை இழக்கிறீர்கள். உங்களால் கட்டுப்படுத்த முடியாத புதிய குணத்தை உங்களையும் மீறி திடீரென்று தீப்பிடிப்பது போல் வெளிக்காட்டுகிறீர்கள்.உடனே அதை உங்களாலும் மற்றவர்களாலும் அணைப்பது என்பது மிகக் கடினமான காரியம் தான்.

சிலர் உங்களது பலவீனத்தை பயன்படுத்தி 'நீங்கள் ஒரு கஞ்சன் என்று சொல்கிறார்கள்' என்று உசுப்பேற்றிவிட்டால் உடனே உங்களுக்கு 'ரோஷம் ' வந்து கடன் வாங்கியாவது செலவு செய்வீர்கள். உங்களை உசுப்பேற்றியவர்கள் அதனால் மிகுந்த பலன் அடைவார்கள் . ஆனால் உங்களுடைய கடனை  கோபம் வந்து அடைக்குமா ? அல்லது மற்றவர்கள் தான் அடைப்பார்களா ? இது கூட பரவாயில்லை சில சமயத்தில் சொத்துகளைக் கூட  இழக்கிறார்கள். சிலரோ வரம்பு மீறி அடி, உதை ஏன் கொலை செயுமளவிற்க்கும் துணிந்துவிடுகிறார்கள்..

கோபம் எதனால் வருகின்றது? தான் நினைக்கும் அல்லது சொல்லும் வேலைகளை மற்றவர்கள் செய்யாமல் இருக்கும்போதும் , அதன்படி மற்றவர்கள் நடக்காமல் போவதனாலும்  வருகின்றது. இதுவும் ஒருவகை சர்வாதிகாரம் தான்.

ஒரு அதிகாரியின் கோபம் தங்களுக்கு கீழ் இருப்பவர்களை பழிவாங்கப் பயன்படுகிறது. அதனால் அந்த வேலை செய்யும் நிறுவனம் அல்லது துறை மிகுந்த பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது. மேலும் நஷ்டத்தை தருகிறது.


ஒரு தலைவனின் கோபம் அவருடைய மதிப்பை குறைத்து அவரது முன்னேற்றத்தை சீர்குலையச் செய்துவிடுகின்றது.

ஒரு குடும்ப்பத் தலைவன் / தலைவியின் கோபம் குடும்ப உறவுகளை சின்னபின்னாமாக்கிவிடுகிறது.

ஒரு ஆசிரியர்களின் கோபம் மாணவர்களின் எதிகாலத்தைப் பாழாக்கிவிடுகிறது.

வாடிக்கையாளர்களின் கோபம் வியாபாரத்தை படுக்கவைத்து விடுகிறது.

நாட்டுத் தலைவனின் கோபம் நாட்டு மக்களின் அழிவிற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

இப்படி பல நிகழ்ந்த உதாரணத்தை கொடுக்கலாம்.

கோபம் வரும்போது உன்னுடம்பு சூடாகின்றது. முகம் சிவக்கின்றது. இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இருதயம் அதிகமாக துடிக்கின்றது. இரத்தக் கொதிப்பு, தீராத தலைவலி , சர்க்கரை வியாதிக்கு அடித்தளமாக அமைகின்றது.


கோபப்படுவர்க்குமுன் நீங்கள் யாரிடத்தில் என்ன பேசுகிறீர்கள் என்று ஒரு சில வினாடி யோசித்து பேசுங்கள். முதலில் யார் என்ன பேச வந்தாலும் அவர்கள் என்னைப்பற்றி பேசவில்லை. யாரோ ஒருவரைப் பற்றி பேசுகிறார் என்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் சில சமயங்களில் நெருங்கிய உறவுகளையும், நட்புகளையும் அற்ப விஷயத்திற்காக நீங்கள் வாழ்க்கை முழுவதிற்கும் துன்பப்பட வேண்டியிருக்கும். 


கோபம் வரும்போது என்னென்ன பின் விளைவுகளெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

* ஒருவகையில் கோபத்தால் நீங்கள் செய்யும் பாவத்திற்கு தாய் தந்தையாக மாறுகிறீர்கள்.

* (தாய் தந்தைக்கு) கோபம் வந்தால் வீட்டைக் கெடுத்து குட்டிச்சுவராக்கும்.

* (அதனால்) வீட்டில் துன்பம் வளர ஆரம்பிக்கிறது.

* பொல்லாத செயலுக்கு துணை போகும் ஆபத்தை உருவாக்குகிறது.

* உடலுக்கும், வீட்டிற்கும் சீர்கேடு விளைவிக்கின்றது.

* கோபம் வரும்போது நெருங்கிய உறவுகளை துண்டிக்கும் 'வெட்டு இயந்திரமாக ' மாறிவிடுகின்றது.

* உன் இயல்பான குணத்தை மாற்றி 'பழிக்குப்பழி ' வாங்கும் அரக்கனாக உருமாற்றுகிறது.

* பாசமுள்ளவர்களையும் பகைவர்களாக மாற்றி விடும் வல்லமை கொடுக்கிறது.

* மனிதனின் இரக்க குண கருணையை கருவறுக்கும் அரக்க குணமாக மாற்றுகிறது.

* இது மனிதனின் கீழ்த்தரமான குணத்தை பிரதிபலிக்கின்றது.

* இது எவரையும் ஓன்று சேர்க்காது ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் ஆயுதமாகிறது.

* மரணத்தின் போது எதிர்கொள்ளும் அனைத்து அவஸ்தைகளையும் உடம்பில் கொடுத்து அனுபவிக்கச் செய்துவிடுகிறது .

* கடைசியாக மரணமடையச் செய்து உடன் பிறப்புகளை அலைக்களைக்கச் செய்யும் அசுரவல்லமை கொண்டது.

ஆகையால் கோபம் வரும்போது தனிமையை நாடுங்கள். எதிரில் இருப்பவர்களை உடனே வெளியேற்றிவிடுங்கள். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி உங்களுக்குள்  இருக்கும் கோபத் தீயை அணைத்தபின் சாந்தமாக பிரச்சனைகளை எதிர் கொள்ளுங்கள். நாளடைவில் 'கோபம் எப்படியிருக்கும் '  என்று சொல்கிற நிலைமை வந்துவிடுவீர்கள் . பிறகென்ன இனி உங்களைச்  சுற்றியும்  மகிழ்ச்சி தான். நீங்கள் செய்யும் காரியத்திற்கு அனைவரும் துணையாக இருப்பார்கள். முடிந்தால் தியானம் மற்றும் யோகா செய்யுங்கள். கோபத்தை வென்று வாழ்வில் பல சாதனை படைப்பீர்கள்.

உங்கள் கோப முகம் வெற்றி முகமாக மாறும்.


மிருக குணம் தெய்வ குணமாக மாறும்.


பெருமையும் மதிப்பையும் பெறுவீர்கள்.

  இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com     

No comments:

Post a comment