அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
'ஈகோ' வை விரட்டினால்
நன்மைகள் ஆயிரம் வரும்
மதுரை கங்காதரன்
'ஈகோ' வை விரட்டினால்
நன்மைகள் ஆயிரம் வரும்
THOUSANDS OF BENEFITS , IF YOU GET RID OF 'EGO'
'ஈகோ ' என்பது எதற்கெடுத்தாலும் 'நான் தான் செய்தேன்'! 'நான் சொல்லும்படி தான் நடக்கணும்'! 'என்னால் தான் முடியும்'! 'என்னை விட்டால் யாரும் செய்ய முடியாது'! என்று நான் ...எனது .... போன்ற கடுமையான சொற்கள் சிலர் உபயோகிப்பதை கேட்டிருப்பீர்கள். அது பெருபாலும் வறட்டு கௌரவத்தையும், சுயநலத்தின் அதிகபட்ச வெளிப்பாடு என்றுகூட வைத்துக் கொள்ளலாம். மேலும் அது ஒரு சர்வதிகாரத்தின் தோரணை , எல்லோரும் வெறுக்கும்படியான குணமும் என்று சொல்லலாம்.
'ஈகோ' இருக்கும் நபரைச் சுற்றியுள்ளவர்கள் பெரும்பாலும் கஷ்டத்தையும் , துயரத்தையும் தான் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அப்படிப்பட்ட ஆட்கள், நல்லது எதைச் சொன்னாலும் கேட்கவே மாட்டார்கள். காதிலும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் என்ன நினைக்கின்றனரோ அதுவே நடக்கனுமென்று உத்தரவு போடுவார்கள். மற்றவர்களில் கஷ்ட நஷ்டம், நன்மை தீமை பற்றி அவர்களுக்கு சிறிதும் கவலை இருக்காது.
அந்த சுயநலம் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாயும் இருக்கும். அவர்களுக்கு கீழ் தான் எல்லோரும் அடங்கி நடக்கனுமென்கிற எண்ணங்கள் மேலோங்கியே இருக்கும். ஈகோ மனிதர்கள் தங்கள் வாழ்கையில் அவரும் முன்னேற மாட்டார். மற்றவர்களையும் முன்னேறவிடமாட்டர்கள். ஈகோ வும் ஒரு அறியாமையே அல்லது எண்ண வளர்ச்சி இல்லாமையே! அதாவது தங்களைத் தாண்டி அனைவரும் முந்தி விடுவார்களோ என்கிற பயம் அல்லது முன்னெச்சரிக்கை வெளிப்பாடு தான்.
ஈகோ ஒருவரையும் ஒட்டவிடாது. கூட்டு உறவை விரும்பாது.
'ஈகோ' என்றால் 'நான்'. ஆங்கிலத்தில் அதை ' I ' (ஐ) என்று எழுதுவார்கள். எழுத்திலே நிமிர்ந்து நிற்ப்பது போல தெரிகின்றதா? கூடிய விரைவில் அவர் சாய்த்துவிடுவர். அப்படி சாய்ந்து விட்டால் அந்த எழுத்து ' -- ' என்று ஆகிவிடும். அதாவது ஆங்கிலத்தில் ' மைனஸ் ' (தமிழில் கழித்தல் ) என்பது குறிக்கும். அதாவது ஈகோ இருந்தால் உனக்கு 'நஷ்டம் ' என்று காட்டுகின்றது.
இரண்டு ஈகோ உள்ளவர்கள் , அதாவது I & I என்று வைத்துக்கொள்வோம். அதில் யாராவது வளைந்து (சாய்ந்து) கொடுத்தால் என்ன கிடைக்கும். அதாவது I & -- இரண்டும் சேர்ந்தால் ' + ' என்று வரும். அப்படித்தானே. அதாவது ஈகோ வை விட்டு கொடுத்தால் உங்களுக்கு ' நன்மை ' தான் கிடைக்கும் என்பதை குறிக்கின்றது.
சரி ! இரண்டு ஈகோ ஆட்கள் லேசாக சாய்ந்தால் அதாவது ' / ' & ' \ ' என்று இருந்தால் என்னகிடைக்கும்? அதாவது ' X ' (பெருக்கல் - Multiple) என்று தானே கிடைக்கும். அதாவது "கூட்டல்" ( + ) விட பெருக்கல் ( X ) பெரிதல்லாவா? ஆகவே 'நான்' என்று நிமிர்ந்து நிற்காமல் சாய்ந்தோ அல்லது சற்று சாய்ந்து விட்டுக்கொடுத்தால் உங்களுக்கு என்றும் + அதாவது கூடுதல் வெற்றி அல்லது ' X ' அதாவது வெற்றிகளின் பெருக்கம் தான்.
அதை தவிர்க்க நீங்கள் உங்களுக்குள் இருக்கும் பயத்தை, தாழ்வு மனபான்மை ஒழித்து அறிவை வளர்க்கும் சிந்தனையை பெற்று தன்னம்பிக்கையுடன் நீங்கள் நடந்துகொள்வீர்களானால் உங்களுக்கு எந்நாளும் வெற்றி தான். மேலும் ஈகோ வை விரட்ட உடற்பயிற்சி, தியானம் மற்றும் யோகாவும் ஒரு சிறந்த வழியாகும்.
குடும்பத்தில் இருக்கும் 'ஈகோ' பிஞ்சு உள்ளங்களை நஞ்சாக மாற்றிவிடும். இரக்க நெஞ்சங்களை அரக்கத்தனமாக மாற்றிவிடும். கூட்டு குடும்பத்தை சிதறடித்து விடும்.
ஒரு தலைவனில் 'ஈகோ' நாட்டு மக்களுக்கு எந்நாளும் கஷ்டத்தை கொடுக்கும்.
ஒரு நிறுவன தலைவர் / அதிகாரியின் 'ஈகோ' அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையை இருந்திடும்.
ஒரு மனிதனில் 'ஈகோ' என்பது , அவன் தனக்குத்தானே மெதுவாக விஷத்தை (Slow Poison) ஏற்றிக்கொள்வது போல.
குடும்பத்தில் இருக்கும் 'ஈகோ' பிஞ்சு உள்ளங்களை நஞ்சாக மாற்றிவிடும். இரக்க நெஞ்சங்களை அரக்கத்தனமாக மாற்றிவிடும். கூட்டு குடும்பத்தை சிதறடித்து விடும்.
ஒரு தலைவனில் 'ஈகோ' நாட்டு மக்களுக்கு எந்நாளும் கஷ்டத்தை கொடுக்கும்.
ஒரு நிறுவன தலைவர் / அதிகாரியின் 'ஈகோ' அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையை இருந்திடும்.
ஒரு மனிதனில் 'ஈகோ' என்பது , அவன் தனக்குத்தானே மெதுவாக விஷத்தை (Slow Poison) ஏற்றிக்கொள்வது போல.
ஈகோ வை விட்டுத்தள்ளுங்கள்!
உங்களுக்கு + அல்லது X உறுதி தான்
இன்னும் வரும் ....
கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Very Good. Really...
ReplyDelete