அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
வாழ்க்கை என்பது ஒருவழி பாதை.-
வெற்றிப் பாதையின் வழி எது -
LIFE IS A ONE WAY PATH !
WHICH ONE WILL BE THE SUCCESS PATH -
வாழ்க்கை என்பது ஒருவழி பயணம். நீங்கள் பயணிக்கும் பாதை மாறிப்போனாலோ,தவறி போனாலோ பழைய இடத்திற்கு திரும்ப வர இயலாது. ஆகவே பயணிக்கும் போதே மிகச் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் மூன்று காலங்களின் தொடர்புகளை தவிர்க்க முடியாதனாகவே இருக்கிறான். அதாவது மனித வாழ்க்கை பயணம் கடந்த நாட்கள் (கடந்த காலம்) , இப்போது பயணிக்கும் நாள் (நிகழ காலம்), இனி வரும் நாட்கள் (வருங்காலம்) என்று மூன்று காலங்களாக பிரித்து பயணிக்கிறான்.
ஒரு சிலர் தன் பாதையை தாங்களே ஒரு புதிய பாதையை கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து அதில் பயணம் மேற்கொள்கிறான்.
சிலர் எதுக்குடா வம்பு ! என்று சிலரின் பாதையில் பின்பற்றி செல்கிறான்.
பலர் எந்த பாதையில் பயணம் செய்யலாம் என்று யோசித்துகொண்டிருக்கின்றனர்.
ரொம்ப பேர் பாதையை பற்றி கவலைபடாமல் இருக்கின்ற இடத்திலே இருந்துகொண்டு 'நமக்கு கொடுப்பினையில்லை ' என்று அங்கேயே இருந்துகொண்டு காலத்தை வீணாக்கி வருகின்றனர்.
ஏனென்றால் நீ பயணிக்க பயணிக்க பாதை மூடிவிடுகின்றது.
ஒரு சிலர் தன் பாதையை தாங்களே ஒரு புதிய பாதையை கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்து அதில் பயணம் மேற்கொள்கிறான்.
சிலர் எதுக்குடா வம்பு ! என்று சிலரின் பாதையில் பின்பற்றி செல்கிறான்.
பலர் எந்த பாதையில் பயணம் செய்யலாம் என்று யோசித்துகொண்டிருக்கின்றனர்.
ரொம்ப பேர் பாதையை பற்றி கவலைபடாமல் இருக்கின்ற இடத்திலே இருந்துகொண்டு 'நமக்கு கொடுப்பினையில்லை ' என்று அங்கேயே இருந்துகொண்டு காலத்தை வீணாக்கி வருகின்றனர்.
ஏனென்றால் நீ பயணிக்க பயணிக்க பாதை மூடிவிடுகின்றது.
உன்னுடைய 'காலம் ' என்ற வண்டி :
ஒவ்வொரு மனிதன் பிறந்த உடன் அவனின் 'வாழ்க்கை ' பயணத்திற்கு ஒரு வண்டி கொடுக்கபடுகிறது. அதன் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. (அதாவது 24 மணி நேரம்). அதன் அமைப்பு எப்படியென்றால் 'சைக்கிள்' (மிதி வண்டி) போன்றது.. நீங்கள் சைக்கிளைப் போன்று வாழ்க்கை வண்டியை முன்னே தான் ஓட்டமுடியுமே தவிர பின்னே (Reverse) ஓட்டமுடியாது. அதன் இரு சக்கரங்கள் உனது திறமையும் அறிவும் என்று வைத்துக் கொள்ளலாம்., மிதிக்கும் 'பெடல்' என்பது உனது கடின உழைப்பும், இடைவிடாத முயற்சியுமாகும். அதில் ஒரு பொதி சுமக்கும் கூடை , அதாவது அதில் உங்களது கடந்த கால சுமைகளை அடங்கியது
இப்போது ஒரு கேள்வி. பின் ஏன் ஒரு சிலரால் வண்டியை வேகமாக ஓட்டமுடிகின்ற்றது?சிலர் மித வேகமாகவும், பலர் மிகவும் மெதுவாகவும் ஓட்டுகின்றனர்?
இதற்கு பதில் !
நீங்கள் 'சைக்கிள் ' ஓட்டும் பந்தயத்தைப் பார்த்திருக்கீறீர்களா ? மிகவும் வேகமாக ஓடும் சைக்கிளையும் , மிகவும் மெதுவாக ஓடும் சைக்கிளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பல உண்மைகள் தெரிய வரும்.
அதாவது, வேகமாக சைக்கிளில் தேவையில்லாத பல பாகங்கள் இருக்காது. மிகவும் லேசான உலோகத்தால் செய்யப் பட்டியிருக்கும். ஓட்டுபவர் , தன்னுடைய பாதையில் தெளிவான கவனமும், வேகமாக 'பெடல் ' போடுபவர்களாகவும் இருப்பார். இவைகளெல்லாம் வேகமாக ஓடுவதற்கு உதவிடும்.
அதே போல வேகமாக வாழ்க்கை பயணிப்பவர்கள், தங்களிடத்தில் கடந்த கால , பயன்பெறாத, தேவையில்லாத சுமைகளை அதாவது தோல்விகள், பிரச்சனைகள், துன்பம் தரும் விஷயங்கள் போன்றவை வெட்டியாக சுமக்காமல் போகின்ற வழியில் அவைகளை மீண்டும் தலைதூக்காதவாறு புதைத்துவிட்டு, மகிழ்ச்சி தரும் எண்ணங்கள், சிறு சிறு வெற்றிகள், வாழ்க்கைக்கு பயன் தரும் அனுபவங்கள் மட்டுமே தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர். துன்ப சுமைகளோ பயணத்தின் வேகத்தை 100 மடங்கு குறைக்கும் என்பது வேகமாக செல்பவர்களுக்குத் தெரியும். ஆனால் இன்ப எண்ணங்களோ மன ஊக்கமும் , தன்னம்பிக்கையும் கூட்டி வேகத்தை 100 மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்பது அவர்களது அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம். அதை எப்போதும் மனதில் வைத்திருப்பர்.
மேலும் வேகமாக ஓட்டுபவர்கள், தங்களுடைய பாதை தெளிவான இலக்கை நோக்கியும், திட்டமிட்ட சரியான பாதையாக இருக்கும். தங்களுடைய வருங்கால இலட்சியத்தை அடைய , கடந்த கால அனுபத்தை கொண்டு இன்று இருக்கும் நிகழ்காலத்தில் திட்டமிடுகின்றனர். ஆகவே அவர்களின் வாழ்க்கைப் பயணம் வேகமாகவும் வெற்றிப்பயணமாகவும் இருக்கும். அவர்கள் ஒருபோதும் கடந்த கால நிகழ்வுகளை அனாவிஷயமாக பேசுவதோ, வருங்கால கனவு காண்பதிலோ நிகழ்காலத்தில் வீணாக்குவதில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், தேவையில்லாச் சுமைகளை புதைத்து, மனவூக்கம் தரும் தன்னம்பிக்கை கொண்டு விடா முயற்சியும், கடினமான உழைப்பின் மூலம் தங்களுடைய திறமை , அறிவை வளர்த்துக்கொண்டு திட்டமிட்டபடி சரியான பாதையில் தெளிவான இலக்கை அடைவதே!
ஆகவே கடந்த கால சுமைகளை புதைத்துவிடுங்கள். உங்களை ஊக்கப்படுத்தும் மகிழ்ச்சியான அனுபவத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
நிகழகாலத்தில் திட்டமிடுங்கள்.
வருங்காலத்தில் உங்களின் வெற்றி இலக்கை எளிதில் அடையலாம்.
இன்னும் வரும் ....
கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
inspiring!!!!!
ReplyDeleteSuperb...
ReplyDeleteஅஹா அருமை அருமை 💖 நன்றி
ReplyDelete