அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
வாய்ப்பு மேகம்
வெற்றி மழையாகப் பொழியும் வழி
வெற்றி மழையாகப் பொழியும் வழி
A WAY TO CONVERT OPPORTUNITY CLOUD TO SUCCESSFUL RAIN
பாத்திரம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தண்ணீர் வரும் குழாயின் வாய்க்கு (விழுவதற்கு) கீழ் நேராக இருந்தால் தான் அந்த பாத்திரத்தில் தண்ணீர் நிறையும்.
என்னுடைய 'தன்னம்பிக்கை ' ஊட்டும் பயிற்சி வகுப்பில் நடந்த நிகழ்ச்சியை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எப்போதும் எனது பயிற்சி வகுப்பில் முதலில் அதில் பங்கெடுத்துக் கொள்கிறவர்கள் ஆர்வம் உண்டாக்கும் வகையில் வாழ்கையில் , வகுப்பில் பயனுள்ள வகையில் ஒரு விளக்கத்தை செய்முறையுடன் கொடுப்பேன். அப்போது தான் அவர்கள் எப்போதும் அதனை மறக்கமாட்டார்கள்.
அதன்படி, நான் ஒரு பாத்திரத்தை (தூக்கு வாளி போன்று வாய் அகலமுள்ளது) எடுத்துக்கொண்டேன். பிறகு ஒரு சிறிய டம்ளரில் தண்ணீரை மேஜையின் மீது வைத்தேன். அவர்களிடத்தில் " யாராவது ஒருவர் முன்வந்து இந்த சிறிய டம்ளரில் இருக்கும் தண்ணீரை அந்த பாத்திரத்தில் ஊற்றுகிறீர்களா ? " என்று கேட்டேன். எல்லோரும் நான்! நீ! என்று போட்டி போட்டுக்கொண்டு வந்தனர்.
ஒருவரிடத்தில் அந்த தண்ணீர் உள்ள சிறிய டம்ளரை கையில் கொடுத்தேன். கொடுத்த வேகத்தில் அந்த பாத்திரத்தில் ஊற்ற போனார். நான் உடனே அவரைத் தடுத்து "இப்போது வேண்டாம். நான் சொல்லும்போது ஊற்றினால் போதுமென்றேன்."
பிறகு அந்த பத்திரத்தை சுமார் 20 அடி தூரத்தில் வைத்தேன். இப்போது அவரிடத்தில் "இந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரை அந்த பாத்தித்தில் கொஞ்சம் கூட சிந்தாமல், வீணாக்காமல் முழு தண்ணீரையும் ஊற்றும்படிச் சொன்னேன்." சொன்னவுடன் முழி முழி வென்று முழித்தான். 'முடியாது' என்பதை ஜாடையில் தலையை ஆட்டினான்.
அதன் பிறகு அந்த பாத்திரத்தை அவர் வைத்திருக்கும் டம்ளரை நோக்கி 5 அடிக்கு முன்னால் இழுத்து வைத்தேன். மீண்டும் 'முடியாது 'என்றான். மேலும் ஒரு 5 அடி முன்னால் வைத்தேன் (இப்போது 10 அடி தூரத்தில் பாத்திரம் உள்ளது). அதற்கு மேலும் 5 முன்னால் .....ம்ஹூம் ... கடைசியாக 5 அடி முன்னால் வரும்போது அவன் வைத்திருக்கும் டம்ளர் நேராக அந்த பாத்திரம் இருந்தது. இப்போது ஊற்றச் சொன்னேன். ஒரு சொட்டு சிந்தாமல் சரியாக ஊற்றினான். அதற்கு எல்லோரையும் கையை தட்டச் சொல்லி பாராட்டை தெரிவித்தேன்.
இதிலிருந்து நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் , நான் பாடம் நடத்தும்போதும் அல்லது யாராவது ஒரு விஷயத்தை பேசும்போது (அது டம்ளரில் இருக்கும் தண்ணீர் போன்றது) பாத்திரம் போல கவனத்தை எங்கேயோ வைத்துக்கொண்டால் நான் என்ன சொன்னாலும் பிரயோஜனம் இருக்காது, அவைகள் உங்களது காது வழியாக நுழைந்து மூளையில் பதியாது.
இந்த செய்முறை பயிற்சியிலிருந்து , அவர்களுக்கு வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியதை பாடத்தை போதித்தேன். அதாவது நான் உங்களுக்கு பாடம் நடத்துவது என்பது வாழ்கையில் உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகள், மகிழ்ச்சியான நேரங்கள், நல்ல சிந்தனைகள். அதை வாங்கிக் கொள்ளவேண்டுமென்றால், உங்கள் கவனம் பாத்திரம் போல மிகவும் தள்ளி இருந்தால் நான் என்ன சொன்னாலும் உங்கள் மூளையில் ஏறாது.
"ஆகவே உங்கள் கவனத்தை ஒருநிலைப்படுத்தி உங்களது பார்வையை ஒருமனதோடு நேருக்கு நேராக வைத்துகொண்டு என்னை நன்கு கவனித்தால் தான் நான் சொல்லும் விஷயங்களும், கொடுக்கும் சிந்தனைகளும் உங்கள் மனதில் ஆழமாக பதியும்" என்று சொன்னேன்.
அதாவது உனது கவன பாத்திரம் ஏன் தள்ளியிருகின்றது? (எடுத்துக் காட்டாக 20 அடி). உங்களுடைய பிரச்சனைகளை நினைப்பது (5 அடி என்று கொள்), நீங்கள் அடைந்த ஏமாற்றங்கள் (அது ஒரு 5 அடி), எதிர் கொண்ட தோல்விகள் (அதுவும் ஒரு 5 அடி), உங்களுக்கு ஏற்பட்ட ஆறாத வடுக்கள் (அது ஒரு 5 அடி). இவைகள் தான் தள்ளி வைப்பது.
ஆகவே வாய்ப்புகளை , மகிழ்ச்சிகளை , நல்ல விஷயங்களை எதிர்கொள்ளும்போது உங்களது கவனம் தள்ளி போகும் அல்லது சிதறும் படியாக பிரச்சனைகளை நினைப்பதை தூக்கி எறிந்து விடுங்கள். அதன் பிறகு ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் வடுக்களில் என்று எல்லாவற்றையும் அகற்றுங்கள். இப்போது உங்கள் கவனம் 100% கிடைத்த வாய்ப்புகளை , மகிழ்ச்சிகளை , நல்ல விஷயங்களில் செலுத்தும்போது நீங்கள் கட்டாயம் வெற்றி பெறமுடியும்.
வெற்றிக்கு இரண்டு வழிகள் :
ஒன்று பாத்திரத்தை டம்ளரை நோக்கி நகர்த்துவது முதல் வகை. டம்ளர் பாத்திரத்தை நோக்கி நகர்த்திவது இரண்டாம் வகை. நான் பாடம் எடுப்பது முதல் வகை. ஐ.நெட், டி .வி.. ரேடியோ, மொபைல் போன்றவை இரண்டாம் வகை.
அதுபோல:
பூமியை தோண்டினால் தண்ணீர் வரும். சரி தான்! ஆனால் பாலைவனத்தில் தோண்டினால் தண்ணீர் கிடைக்குமா? நாம் தான் தண்ணீர் கிடைக்கும் இடத்தை தேடித் தோண்டவேண்டும்.
மழையானது கடலில் விழுந்தால் யாருக்கு என்ன லாபம். அது நிலத்தில் விழுந்தால் தான் மக்களுக்கு பயன். அதற்கு பசுமையான உயர்ந்த மரங்கள் அந்த வாய்ப்பு மேகத்தை தன் பக்கத்தில் இழுத்து மழையாக பொழிய வைக்கின்றது.
அதுபோல வேகமாக செல்லும் வாய்ப்பு மேகங்கள் உங்களுக்கு வெற்றி மழையாக கிடைக்கவேண்டுமென்றால் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் கொண்டு எதிர்கொள்ளுங்கள். வெற்றியை எளிதாக அடையலாம்.
இன்னும் வரும் ....

ஆகவே
ஒன்று
வெற்றி கொடுப்பவர்களை நோக்கி நகருங்கள்!
அல்லது
வெற்றி கொடுப்பவர்கள் உங்களை நோக்கி வரும்படி இழுத்துகொள்ளுங்கள் !
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Good..
ReplyDelete