அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்
நீங்கள் ஏணியா ? அல்லது மலையா ?
ARE YOU A LADDER OR A MOUNTAIN
ஏணியை வேண்டியளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம். அதில் யார் வேண்டுமானாலும் எளிதில் ஏறி பயணம் செய்யலாம். எளிமையானதும் கூட. ஏணிகளின் படிகளே ஒரு வழிகாட்டியாக விளங்கும். அதன் அமைப்பு ஒரே சீராகவும் முறையாகவும் இருக்கும்.
ஆனால் உயர்ந்த மலை அப்படியில்லை. அதில் ஏறுவதற்கு சிறந்த பயிற்சி வேண்டும். கற்களும் முட்களும் இருப்பதால் ஏறுவது மிகவும் கடினம். சரியானபடி பாதை இல்லாமலும் இருக்கும். அதனால் மேற்கொண்டு வளரவும் முடியாது.
அதுபோல தன்னுடைய திறமை, அறிவு, முயற்சியினால் தன்னம்பிக்கை உடையோர்களின் தகுதியுள்ள பதவி உயர்வு ஒரு ஏணியைப் போலவாகும். அவர் அடைந்த பதவியில் வழிகாட்டுதல் இருக்கும். அவரால் பலரை ஊக்கப் படுத்தி தன நிலையினையோ அல்லது அதற்கு மேலோ எற்றிவிடமுடியும். தகுதியை வளர்த்துக் கொள்ளும் போது அவரது உயரம் ஏணி போல் உயர்த்திக் கொள்ளலாம். அவர்களின் வெற்றிபாதை சீராகவும் முறையாகவும் எளிமையாகவும் இருக்கும்.
தகுதியில்லாமல், திறமையில்லாமல் ஒருவன் உயரத்தில் இருப்பது மலையின் மேல் இருப்பதற்குச் சமம். அதனால் மற்றவர்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. பாதை சரியாக தெரியாததால் மற்றவர்களால் அவ்வளவு எளிதாக பின்பற்ற இயலாது. ஏற்கனவே தகுதி இல்லாதலால் அவர்களால் மேற்கொண்டு உயரமுடிவதில்லை.
நீங்கள் மற்றவர்களுக்கு முன்னேற உதவும் ஏணியா ?
அல்லது
கரடு முரடான மலையா ?
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Good One, Gangadaran
ReplyDeleteI loved reading it
Prof Punch
Good...
ReplyDelete