அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்
'துறவு' என்பதன் அர்த்தம் - AT THE TIME OF DEATH
நாம் இறக்கும்போது எதுவுமே கொண்டு போக முடியாது. அதாவது பட்டினத்தார் கூறியது படி 'செத்த பின் காதறுந்த ஊசி கூட உடன் வராது !' என்பது உண்மை தான். ஏன் ஒரு செல்லாத காசை கூட உடன் கொண்டு செல்ல முடியாது, கொண்டு செல்லவும் முடியாது? அதனால் இருப்பதை துறந்துவிட்டு அதாவது மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு வாழ்நாள் முழுவதும் கடைசி வரை 'பரதேசியாக வாழ் ' என்கிற அர்த்தத்தில் தவறாக புரிந்துகொண்டு தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்களை தங்களுடைய குடும்பத்திற்கும் கூட கொடுக்காமல் 'வாழ்கையில் முக்தி பெற அனைத்தையும் துறக்கவேண்டும் ' என்று போதிக்கும் உழைக்காத வாய்ச்சொல் ஜாலம் புரியும் போலி சாமியார்களிடத்தில் ஏமாந்து வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். வாங்கிய போலி சாமியார்களோ அதை வைத்துக்கொண்டு ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
அதுவுமில்லாமல் சிறிய வயதில் 'எல்லாம் துறந்தவன்' என்பவரிடத்தில் தங்கள் சொத்து முழுவதும் கொடுத்து காலம் பூராவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களிடம் கொடுத்த செல்வம் ஒருபோதும் திரும்ப கிடைக்காது. அத்தகைய போலிமகானாக இருப்பரிடத்தில் ஒரு பைசா கூட கொடுத்துவிடாதீர்கள். அவர்கள் பேச்சு உனக்கு ஒருவேளை சாப்பாட்டிற்கும் உதவாது.
அறிவுள்ளவனோ, உழைக்க முடியும் என்கிறவனோ பரதேசியாய் காலம் முழுவதும் வாழ்வதில் என்ன பிரயோஜனம்?
'எல்லாம் துறந்தவன்' என்று யாருக்கும் உதவாமல் சோம்பேறியாய் உழைக்காமல் இருந்தால் யாருக்கும் எந்த ஒரு பிரயோசனமும் கிடையாது. ஆக மூச்சு இருக்கும் வரை உழை அல்லது உதவி செய். அறிவு ஒத்துழைப்பு இருக்கும்வரை பாடுபடு. உழைக்கும் மக்களுக்கு உதவி செய். அது வீண் போகாது. உன் வாழ்நாள் முழுவதும் அவர்கள் பேசுவார்கள்.
நடப்பது என்னவென்றால், அப்படி செல்வமிருப்பவர்களின் வீட்டில், அந்த சொத்து கிடைக்குமென்று கடைசி வரை மற்றவர்கள் உழைக்காமல் சோம்பேறியாய் இருக்கின்றனர். உழைப்பவரோ கடைசிவரை உழைத்து சேர்த்த செல்வங்களை பகிர்ந்து கொடுக்காமல் அனைவரையும் கஷ்டத்தில் விட்டு விட்டு செல்கின்றனர். அந்த சொத்தோ யார் யாரோ அனுபவிக்கும் நிலைமையை உருவாக்கிவிடுகின்றனர்.
கடைசி காலத்தில் உங்கள் விருப்பப்படி சந்தோஷமாக பகிர்ந்து கொடுத்து துறந்த நிலையுடன் உலகை விட்டுசெல்வதாகும்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment