அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
எதற்கு மதிப்பு அதிகம் - பேச்சா அல்லது செயலா?
WHICH ONE IS MOST VALUED - SPEECH OR ACTION
முன்பெல்லாம் தலைவர் கூட்டத்தில் பேசுகிறார் என்றால் அதை கேட்பவர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இன்று,.. கூட்டத்தை சேர்க்க வேண்டுமென்றால் பணம் கொடுத்து, சாப்பாடு போட்டு போக்குவரத்து செலவு செய்தால் தான் பேருக்கு வருவார்கள். ஏன் இந்த மாற்றம். மக்களுக்கு தலைவர்களின் மேல் நம்பிக்கை இல்லை. வெறும் பேச்சில் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ' என்று ஏழைகளிடத்தில் எத்தனை வருடம் கூறி ஏமாற்றுவது. வெறும் வாய்ஜாலம் கேட்பதற்கு யாரும் தயாரில்லை.
உதாரணமாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் வெறும்னே பேசிக்கொண்டே இருந்தால் அந்த திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுமா? கதாநாயகன் என்றால் மிக பெரிய பிரச்சனைகளை தன்னுடைய ஆக்ஸன் அல்லது பரபரப்பான செயலினால் வில்லன்களை அறிவுகொண்டு , பலத்தை கொண்டு எதிர்த்து மக்களுக்காக போராடி ஜெயித்துக் காட்டவேண்டுமென்று தான் அனைவரும் விரும்புவார்கள்.
இப்போதெல்லாம் செயல் செயல் என்று செயலை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். செயல இல்லையேல் மதிப்பு இல்லை. நீங்கள் உங்களுக்குள் எத்தனை நல்ல திட்டங்கள், நல்ல எண்ணங்கள் இருந்தாலும் பிரயோஜனம் ஏதுமில்லை. அதில் எவ்வளவு மக்களுக்காக மக்களின் நன்மைக்காக சாதித்து இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் அதிகமாக பேசும்போது குறைவாகவே சிந்திக்கின்றான் என்று அர்த்தம். தனக்குத்தானே புகழ்ந்து பேசுவதனால் கேட்பவர்களுக்கு எரிச்சல் தான் வரும். உண்மையில் புகழுக்குண்டான செயலை செய்யாதபோது யார் அவரின் பேச்சை கேட்பார்கள். மேலும் அவர் சொல்லியபடி யார் தான் நடப்பார்கள்? மேலும் சொன்னதையே சொல்லி சொல்லி கேட்பவர்களை அலுக்கவைத்தால் நல்லதா?
ஆகவே பேச்சை குறை. சிந்தனையை வளர்த்து எண்ணங்களை பண்படுத்திக்கொள். ஒரு சிறந்த கொள்கையை உருவாக்கிக் கொள். அதை அடித்தளமாகக் கொண்டு நல்ல திட்டத்தை தீட்டு. அதை அடைவதற்கான வழிமுறைகளை அலசி ஆராய்ந்து அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக செயல் மூலம் திட்டத்தை செயல்படுத்தினால் உங்களால் எளிதில் வெற்றி பெறமுடியும்.
செயல் செய்தால் பேசுவதற்கு வேலையில்லை.
செயல் இல்லையேல் நீங்கள் பேசுவதில் அர்த்தமில்லை.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Good..
ReplyDelete