அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
'கொசு 'விடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்!
GET A LESSON FROM MOSQUITO
மனிதன் அறிவுள்ளவன்! ஆற்றல் மிக்கவன்! மிகவும் பலசாலி! என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் கொசுவின் பலம் எப்படி? நம்மை விட பலமடங்கு குறைவு! அப்படித்தானே! கொசு தான் உயிர் வாழவேண்டுமென்றால் மனிதனின் இரத்தம் தேவை. அந்த இரத்தம் மனித உடலிலிருந்து கொசு எடுத்துக் கொள்வதற்காகவே ஆங்காங்கே அதற்கென்று பல ஓட்டைகள் நமது உடலில் இருக்கின்றதா? இல்லை , நாம் தாம் 'பாவம் கொசு' என்று நமது உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்ச நாம் அனுமதிகின்றோமா? கட்டாயம் இல்லை. பின் எப்படி எடுத்துக் கொள்கிறது?
அதற்குத் தெரியம் நமது உடலெங்கும் அதற்கு வேண்டிய இரத்தம் இருக்கின்றது என்று! அது நமது உடலில் அதுவாகவே பலத்துடன் போராடி ஓட்டைபோட்டு உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றது. அது நமது உடம்பில் உட்காரும் போது அடிககிறோம்! விரட்டுகிறோம்! கொல்ல துடிக்கிறோம்! ஏன் பலவித கிரீம் மற்றும் கொசு விரட்டிகளால் துரத்த பார்க்கிறோம்! ஆனால் அனைத்திற்கும் தப்பித்து மேலும் மேலும் போராடி நாம் ஓய்ந்தாலும் அது ஓயாது இரவு முழுதும் கூட போராடி நமது உடம்பிலிருந்து இரத்தத்தை உறிஞ்சிய பிறகே அது நம்மை விட்டு போகின்றன.
அது கையில் உட்காருவதை நாம் பார்த்துவிட்டோமானால் அது பறந்து காலில் உட்காருகிறது. அப்போதும் நாம் அடிக்கமுனைந்தால் கன்னத்தில் ... நெற்றியில்... முதுகில்... நெஞ்சில் ... இப்படி போராடித் தான் தனக்கு தேவையான மனித இரத்தத்தை பெறுகின்றன. அது அசறுகின்றதா? தன்னுடைய காரியம் முடியும் வரை பலவகைகளில் முயற்சி செய்தல்லவா வெற்றி பெறுகின்றது!
மனிதன் அப்படியா? இந்த உலகம் சிறியதல்ல! அவனைவிட கோடிக்கணக்கான மடங்கு பெரியது. எங்கும் அவனுக்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் அவன் நான்கு இடங்களில் தோல்வி கண்டவுடன், நாலு இடத்தில் முயற்சி செய்து கிடைக்காமல் போனவுடன், நான்குபேர் விரட்டியவுடன் உடனே சோர்ந்து மேலும் முயற்சி செய்யாமல் விட்டு விடுகின்றான். ஆனால் அவனுக்கு எதிரில் நாற்பது வாய்ப்புகள் , அதற்குமேல் நானூறு வாய்ப்புகள் இருப்பதை கண்டுகொள்ளாமல் மேலும் முயற்சிக்காமல் விட்டுவிடுகிறான். அதற்கு அவனின் இயலாமை, முயலாமை மற்றும் சோம்பேறித்தனம் தான் காரணம். தேடுவதற்கு ஆசைபடாமல் அதை அடையாமல் அவன் தினமும் கஷ்டப்படுவதற்கு யார் காரணம்.?
தேடு! ஓடு ! அடை ! முன்னேறும் வாய்ப்புகள் இந்த உலகெங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன. முயற்சி செய்! ஓன்று இல்லாவிட்டால் மற்றொன்று! இது இல்லாவிட்டால் அது! இவன் இல்லாவிட்டால் அவன்! இங்கு இல்லாவிட்டால் அங்கு! என்று உனது அறிவைக்கொண்டு தன்னம்பிக்கையுடன் முயற்சி செய் ! நீ விரும்பும் இலக்கை அடைவாய்! வாழ்கையில் பல வெற்றிகளை குவிப்பாய்!
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
மிகநன்று
ReplyDeleteVery Good
ReplyDelete