அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
எனக்குப் பிடித்த நிறம், பிடித்த எண் இத்தியாதி இத்தியாதி...
ARE YOU HAVING SOME SELECTED FAVORITE.
எனக்கு பச்சை நிறம் என்றால் மிகவும் பிடிக்கும்! அது தான் எனது ராசியான நிறம். அதே போல் எனக்குப் பிடித்த எண் 6 (ஆறு)! எனக்கு பிடித்த உணவு பூரி! எனக்கு பிடித்த நடிகர் ! பிடித்த நடிகை ! பிடித்த தலைவர் ! பிடித்த ஆசிரியர்! எனக்கு பிடித்த ராசிக்கல்! இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது. இப்படி நீங்கள் உங்கள் மனதை குறுகிய எண்ணங்களை கொண்டு தயார் படுத்தி கொண்டால் நீங்கள் மிகவும் சிறிய விஷயத்திற்க்கெல்லாம் கவலைபட நேரிடும்.
என் நண்பர் ஒருவர் பஸ் டிக்கெட் வாங்கியவுடன் அதிலிருக்கும் எங்களை கூட்டிப் பார்த்துவிட்டு 'சே, எனக்கு பிடித்த நம்பர் இல்லையே !' என்று கவலை படுவார் . அது மட்டுமா ? வண்டியின் நம்பர் அவனுடைய ராசி நம்பருக்காக அதிகம் விலை கொடுத்து வாங்கினான். கவனக் குறைவினால் சிறு விபத்து நடந்தது என்பது அது ஒரு தனிக் கதை. அப்போது ராசி நம்பர் என்னானது?
ஒரு விருந்திற்கோ , நண்பர் வீட்டிற்கோ செல்கிறீர்கள் ! அன்புடன் உபசரிக்கிறார்கள். ஒருவேளை அங்கு உங்களுக்கு பிடித்த உணவு இல்லையெனில் அவர்கள் எவ்வளவு பாசத்துடன் கவனித்தாலும் உங்கள் மனம் இந்த சிறு சாப்பாடு விஷயத்திற்காக திருப்திபடாது. இப்படி வேண்டா வெறுப்பாக வீட்டினிலோ வெளியிலோ சாப்பிட்டால் அது உடல்நலத்திற்கு உதவுமா! சிலர் ஸ்வீட் என்றால் உயிரை விடுவார்கள். ஆனால் அவர்களுக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டால் பிடித்தது என்னவாகும்! அதேபோல் எல்லாம்.
ஒருவன் 'இண்டர்விவ் 'க்காக நீண்ட நேரம் காத்திருந்தான். பக்கத்தில் இருந்தவர் பொறுமை இழந்து "நீங்கள் எந்த பஸ்க்காக காத்திருக்கிறீர்கள்? " என்று கேட்டார். அதற்கு அவர் என் ராசியான எண் 8. அதற்காக நிற்கிறேன். என்றார். கேட்டவரோ தலையிலடித்துக் கொண்டு "அந்த பஸ் இந்தபக்கம் வராது. மேலும் அது நீங்கள் செல்ல நினைக்கும் இடத்திற்குப் போகாது !" என்று விளக்கம் கொடுத்தார். இப்படியிருந்தால் உங்கள் வேலை எப்படி முடியும்?
நீங்கள் உங்களுக்கு பிடித்த 'ஊதா 'நிற சர்ட் அணிந்துகொண்டு 'இண்டர்விவ் ' செல்கிறீர்கள். அங்கு 'பிங்க்' சர்ட் அணிந்தவர் 'இண்டர்விவ் ' நடத்துகிறார். உடனே உங்களுக்கு பிடிக்காத அந்த நிறத்தை பார்த்தவுடன் உங்கள் மனம் சற்று அதிருப்தியடைகிறது. அதே எண்ணத்துடன் இருந்தால் அவரின் கேள்விக்கு சரியான பதில் தெரிந்திருந்தாலும் கூட தெளிவாக சொல்லமுடியுமா?
ஆக உங்களுக்கு சில குறிப்பிட்டது பிடித்த காரணத்திற்க்காக மற்ற அனைத்தும் உங்களுக்கு எதிரியாகவே பார்க்கத் தோன்றும். ஆதலால் பலவித நிறங்களை இழக்கிறீர்கள். பல சுவைகள் தெரியாமலே போய்விடுகின்றது. பல தலைவர்களின் நல்ல செயல்கள் தெரிந்து கொள்ளாமலே போய்விடும் ஆபத்து ஏற்படுகின்றது.
உங்களுக்கு பிடித்த படிப்பு, உங்களுடைய குறைவான மதிப்பெண்களால் கிடைக்காமல் போய்விடுகின்றது. அவ்வளவு தான் என் வாழ்க்கை என்றிருந்தால் நீங்கள் என்னாவீர்கள். விடாதீர்கள் கிடைத்ததை பிடிக்குமாறு ஏற்றுக்கொண்டு முன்னேறப் பாருங்கள்.
'பெண்களெல்லாம் இப்படித்தான். இவர்களுக்கு இது பிடிக்காது ,வராது . அது பிடிக்காது , வராது. அவர்களுக்கு பிடிக்காது' என்பதெல்லாம் மலையேறிப்போய் எல்லா இடங்களிலும் அவர்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு இணையாக அனைவருக்கும் பிடிக்கும் பல வேலைகளை செய்து சாதனை புரியவில்லைய? அந்த காலத்தில் பெண்களுக்கு பிடிக்காதது இப்போது எப்படி பிடிக்க ஆரம்பித்தது. எல்லாம் மனம் மற்றும் எண்ணங்கள் தான்.
எனவே இன்று முதல் உங்களுக்கு எல்லாமே பிடிக்கும். அனைத்தும் எனக்காக படைக்கபட்டிருக்கின்றது. அதை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பேன் என்று விசால மனத்துடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள். இனி உங்கள் வாழ்வில் என்றும் இனிமை பொங்கும்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
மிக.......நன்று..........!
ReplyDeleteVery good..
ReplyDelete