அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
உங்கள் மதிப்பை யாரால் அளவிட முடியும்-
WHO CAN ASSIGN YOUR VALUE
ஒருவரின் மதிப்பு அல்லது நீங்கள் உபயோகிக்கும் ஒரு பொருளின் மதிப்பு எவ்வளவு என்று கேட்டால் பதில் மெதுவாக வரும் அல்லது வரவே வராது ! உதாரணமாக இந்த மேஜையின் மதிப்பு என்ன? மௌனம் ! இந்த மோதிரத்தின் மதிப்பு! மௌனம்! இந்த செயினின் மதிப்பு ...மௌனம்! அல்லது உத்தேசமாய் சொல்வார்கள். அன்றாடம் நாம் உபயோகிக்கும் வீட்டு உபயோக சாமான்களின் மதிப்பை கூட ஓரளவு சொல்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
ஆனால் அவரவர் வேலை பார்க்கும் தொழில் சம்பந்தப்பட்ட பொருளின் மதிப்பு அவர்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். (தங்க நகை ஆசாரிக்கு) பொற்கொல்லருக்கு தங்கத்தின் மதிப்பு தெரிந்திருக்கும். தச்சருக்கு மரத்தின் மதிப்பு தெரிந்திருக்கும். பட்டு துணியின் மகிப்பு ஒரு நெசவாளிக்குத் தெரியும். ஒரு சிலையின் மதிப்பு அதை வடிப்பனுக்குத் தெரியும். சித்திரத்தின் மதிப்பு ஒரு ஓவியனுக்குத் தெரியும். ஒரு மாணவனின் மதிப்பு அவனின் ஆசிரியருக்குத் தெரியும். ஒரு தொழிலாளியின் மதிப்பு அதன் நிர்வாகிக்குத் தெரியும்.
இதை ஒத்துகொள்வீர்களா! இது எப்படி சாத்தியமாகிறது. பல வருட அனுபவத்தால் , பல தடவை அவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை அல்லது நபர்களை அலசி ஆராய்ந்து வந்ததால் அவர்களுக்கு அதன் / அவர் மதிப்பு தெரிகின்றது.
ஆனால் மனிதனின் மதிப்பை அளவிட முடியுமா?
முடியாது ! ஏனென்றால் பொருளின் மதிப்புக்கும் மனிதனின் மதிப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. பொருளின் மதிப்பு மாறாது! ஆனால் மனிதனின் மதிப்பு அவர்களை உபயோகிக்கும் விதத்தில் இருக்கின்றது. ஒரு மனிதனை என்னை செய்தால் அவனை பிரகாசிக்க வைக்கலாம் என்பதை அறிந்து கொண்டால் அவனின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி மதிப்பை பல மடங்கு உயர்த்தலாம்.
ஒரு தன்னுடைய சீடர்களிடத்தில் ஒரு இரும்புத் துண்டை கொடுத்து அதன் மதிப்பு எவ்வளவு என்று ஒருவாரத்தில் தெரிவிக்கும்படி கூறினார். 'இதன மதிப்பை தெரிந்துகொள்ள இவ்வளவு நாட்கள் எதற்கு? இருப்புக் கடையில் கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள்' என்று சிலர் நினைத்தார்கள். சிலர் இதில் ஏதோ ஒரு சூட்சமம் இருக்கின்றது என்று எண்ணி யோசிக்க ஆரம்பித்தனர்.
ஒரு வாரம் கடந்தது. அவகளிடத்தில் இருக்கும் அந்த இரும்பு சாமானை ஒரு பெட்டியில் வைத்திருந்தனர். குரு, அனைவரிடத்தில் நீங்கள் கொண்டு வந்திருக்கும் இரும்பு சாமான்களின் மதிப்பை எழுதி வைக்குமாறு சொன்னார். அவரவர் மதிப்பை எழுதி வைத்தனர். கிட்டத்தட்ட அனைவரும் ஒரே மதிப்பையே எழுதியிருந்தனர். ஒரு சிலர் எழுதிய மதிப்பு மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.
குரு முதலில் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு உள்ள பெட்டிகள் அனைத்தையும் திறந்தார். எல்லாமே அவர் கொடுத்த இரும்புத் துண்டு அப்படியே இருந்தது. சரி ! மதிப்பு கூடிய பெட்டியை திறந்தார். எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். அது ஒரு அழகான சிலை. அதேபோல் ஆணிகள், கத்திகள் , கார்கள், ரோபோ, ஈபில் டவர் என்று சிலர் வித விதமான பொருட்களை அந்த இரும்புத் துண்டை வைத்து செய்திருந்தனர்.
குரு தொடர்ந்தார்! பார்த்தீர்களா! நான் உங்களுக்கு ஒரே ஒரு சாதாரண இரும்புத் துண்டை கொடுத்தேன். ஆனால் சிலர் மட்டும் தான் அதை நல்லபடியாக யோசித்து அதன் மதிப்பை அதிகமாகியிருக்கிறார்கள். அவர்களே திறமை மற்றும் அறிவாளிகள்.
அதேபோல் நீங்கள் எல்லாம் ஒரு சாதாரணமான இரும்புத்துண்டு. உங்களை நான் அறிவு பயிற்சி கொடுத்து, ஆற்றல் பயிற்சி கொடுத்து, தன்னம்பிக்கை பயிற்சி கொடுத்து அழகான வெற்றிச் சிலை செய்வதே எனது குறிக்கோள். நீங்கள் ஒத்துழைத்தால் உங்களை வெற்றி வெற்றி மனிதராக ஆக்குவது எனது பொறுப்பு' என்று முடித்தார்.
ஆகவே
உங்கள் மதிப்பு சாதாரண இருப்புத் துண்டு அல்ல!
அழகிய வெற்றி சிலை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Very Good.
ReplyDelete