Pages

Saturday 1 September 2012

வீண் பயம் - விரையமாகும் வீரம் (தைரியம்) FEAR IS MAKING YOU A COWARD

அனுபவ பொன் வரிகள்

 


மதுரை கங்காதரன் 



வீண் பயம் ! விரையமாகும் வீரம் (தைரியம்)


FEAR IS MAKING YOU A COWARD 

சிறிய வயது குழந்தையின்  பக்கத்தில் கரப்பான் பூச்சியோ, பல்லியோ  வந்தால் அறிவு முதிர்ச்சி இல்லாமல்   இருந்தாலும்  அதைக் கண்டு பயப்படாது. தைரியமாக பயமில்லாமல் தொட ஓடும். ஏன்? பாம்பு வந்தால் கூட அதைக் கண்டு ஓடாது. கொழுந்துவிட்டு எரியும் சுடரை பிடிக்க ஆசைபடும். சில வேளைகளில் அடம்பிடிக்கும். நம்மையும் மீறி மிகச்சில வேளைகளில் தொட்டும் விடும். சூடு பட்டதும் அழும். பிறகு ஓய்ந்துவிடும்.  


ஆனால் பெரியவனாகும்போது எல்லாவற்றிக்கும் பயம். அந்த பயம் எங்கிருந்து தான் வந்தது? சிலவற்றை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்கிறான். ஆனால் பலவற்றிக்கும் பலர் பயமுறுத்துவதன் பேரில்  காரணமில்லாமல் பயப்படுகிறனர். ஏன் தன்  நிழலைக்கண்டும் , இருட்டில் கயிற்றை பார்த்தும் பயத்தில் அலறி பித்து பிடித்தவர்கள்போல் ஆகிவிடுகின்றான் . அனுபவம் பயத்தை கொடுத்தாலும் அதை அவனுடைய அறிவைக் கொண்டு வெல்வதற்கான  துணிவை வரவிடாமல் தடுத்து விடுகின்றது. அதற்கு மூலகாரணம் மனிதருக்கு வெறும் பயம் காட்டுவது மட்டும் தான் தெரியுமே தவிர அதிலிருந்து தற்காத்துக் கொள்ள, அவற்றை எதிர் கொள்ள துணிச்சலை யாரும் கற்று கொடுப்பதில்லை. அதற்குன்டான அறிவையும் போதிப்பதில்லை. நாயைக்கண்டு பயம். கடலை கண்டு பயம். நீச்சல் குளத்தில் இறங்க பயம். இப்படி எது எடுத்தாலும் பயம் மாயம் தான்.

அதாவது பெரியவனான பிறகு அவனுக்கு அறிவு நிறைய இருந்தாலும் அந்த பயம் அவனை தைரியசாலியாகவிடாமல் வீரத்தை குழிதோண்டி புதைத்து விடுகின்றது. இருட்டை கண்டு அதிகம் பயப்படும்படியாக செய்துவிடுகின்றது. 

ஆகவே யாராவது எதையாவது சொல்லி உன்னை பயமுறுத்தினால் அதனை  கொஞ்சம் கூட மனதினில் எற்றிக்கொள்ளதே? தெளிவான சிந்தனை கொள். அறிவைக்கொண்டு துணிச்சலை வளர்க்க கற்றுக்கொள். 

இதில் என்ன விஷேசமேன்றால் ஒருவரின் பயம் மற்றவருக்கு பயமில்லை. எத்தனை பேர் பாம்பை கண்டு , நாயை கண்டு, பல்லி , கரப்பான் பூச்சியை கண்டு இன்னும் பல கண்டு பயபடாமல்  தைரியமாக இருக்கின்றனர். அவர்களுக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது. அவர்கள் அறிவினால் துணிச்சலை வரவைத்து கொண்டு பயத்தை அறவே நீக்கி வீரத்தை வளர்த்துக் கொள்கின்றனர்.

பயத்தை ஒழி !


அதுதான் தைரியத்திற்கு வழி !




இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 





1 comment: