அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
அர்த்தமுள்ள பொறுமை உலகையாளும்.
YOU CAN RULE THE WORLD BY PATIENCE
மனிதனில் இருக்கும் குணங்களுள் மிகவும் மதிப்பில்லாத பொக்கிஷம் பொறுமை தான். பொறுமையில் இரண்டு வகை உண்டு. அதை எப்படி தெரிந்து கொள்வது? ஏதும் யோசிக்காமல், தெரியாமல் அமைதியாக இருப்பது உங்களுக்கு அது 'பொறுமை ' போல தோன்றும். அந்த பொறுமை உண்மையா? இல்லையா? என்று எளிதாக கண்டுபிக்கலாம்.
முதலாவது வகை பொறுமை :
அப்படிபட்டவர்களிடத்தில் நாம் ஏதேனும் ஒரு காரியம் அல்லது வேலை ஒப்படைக்குபோது எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் , வேலையினைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் , யோசிக்காமல் அவசரமோ இல்லையோ உடனே ஏனோதானோவென்று செய்து முடிப்பார்கள். அது தெளிவில்லாமல் அரைகுறையாய் இருக்கும். மேலும் அதை முடிப்பதற்கு வேறு ஒருவரின் உதவி தேவைப்படும்.
இரண்டாவது வகை பொறுமை :
இவர்களிடத்தில் ஒரு காரியம் ஒப்படைக்குபோது , உடனே செய்யாமல் , அந்த வேலை பற்றிய அறிவையும் ,தன்மையையும் தெளிவாக தெரிந்து கொள்வார்கள். உடனே செய்ய வேண்டிய காரியத்தை உடனடியாகவும், பொறுமையுடன் செய்ய வேண்டியதை காத்திருந்து நேரம் கூடிவரும் போது படக்கென்று செய்து முடித்துவிடுவர். நேரம், காலம், இடம், செயல் அறிந்து செய்வதால் அவர்கள் செய்வதால் 100% வெற்றி கட்டாயம் பெறுவார்.
அதாவது கொக்கு ஆற்றில் ஒற்றை காலில் சிலைபோல நிற்கும். ஆனால் சட்டென்று வேகமாக ஓடிச்செல்லும் மீனை தன அழகால் கவ்விவிடும்.
பல்லி, பூச்சியை பிடிப்பது பார்த்திருக்கீர்களா? பூச்சியை அசையாமல் சிலை போல பார்த்துக்கொண்டே இருக்கும். நேரம் பார்த்து கபாளென்று கண் இமைக்கும் நேரத்தில் பிடித்து விடும்.
பொறுமையாய் இருக்கும்போது அவர்களின் ஆற்றலை அளவுக்கு அதிகமாகவே வளர்த்துகொள்கிறார்கள். அவர்களின் சக்தி வானத்தின் உயரம் இருப்பதைக்கூட தங்களுடைய காலடியில் கொண்டு வரும் திறமையும் வல்லமையும் படைத்தவர்கர்.
பொறுமையை கடைபிடிப்பதால் உங்களிக்கு ஏதும் நஷ்டமில்லை. பொறுமையுள்ளவர்களின் எண்ணமானது எப்போதும் ஒரே நிலையாக இருக்கும். எந்த வேலையிலும் ஆழ்ந்து, சிந்தித்து , நிறை குறைகளை அறிந்து வெற்றி நேரத்தில் கனகட்சிதமாக செய்து முடிப்பார்.
அனால் பொறுமையை கடைபிடிக்காமல் இருந்தால் ஒரு வேலையும் உருப்பிடியாக முடிக்கமுடியாது. வேலையின்போது அவர்கள் அடையும் பரபரப்பு , மனகஷ்டம் சுற்றியிருப்பவர்களை நிம்மதியிழக்கச் செய்துவிடுகின்றது. மேலும் ஒரு புதிய பிரச்னையை உருவாக்க வழிவகையும் செய்துவிடுகின்றது. அவர்களின் கஷ்டம் ஒரு தொடர்கதையாகவே தொடர்ந்து வரும்.
பொறுமையுடன் இருப்பவர்கள் எந்த ஒரு இலக்கையும், எவ்வித தடையுமில்லாமல் தொட்டுவிடும் திறமை படைத்தவர்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கியாளும் சக்தி படைத்தவர்கள். அவர்கள் உணர்வுகளை உள்ளத்தில் புதைத்துவிட்டு காரியத்தில் கண்ணாயிருப்பார்.
ஆனால் பொறுமை இல்லாதவர்கள் தங்களின் உணர்வு தான் முதலில் நிற்கும். வேலையெல்லாம் பிறகு தான். அதனால் பெரும் துன்பம் அடைந்து எப்போதும் கஷ்டப்படுவான்.
பொறுத்தார் பூமியாள்வார்!
பொறுமை கடலினினும் பெரிது!
பொறுமை ஒருவனின் விலைமதிப்பில்லா பொக்கிஷம்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
No comments:
Post a Comment