அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
வாழ்க்கை என்பது 'மராத்தான்' பந்தயம்.
LIFE IS A 'MARATHON' RACE
பந்தயத்தில் மிகவும் நீளமான தூரம் உள்ள பந்தயம் 'மாரத்தான் '. இந்த போட்டியின் தூரம் 42.195 கிலோமீட்டர் அல்லது 26.2 மைல்கள். இதை மிகவும் குறுகிய நேரத்தில் கடந்தவர்கள் தான் வெற்றியாளர்கள். சமீபத்தில் நடந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இதை ஒருவர் 2:53:24 மணி நேரத்திலும், பெண்கள் பிரிவில் இதை ஒருவர் 3:18:53 மணி நேரத்தில் கடந்து சாதனைபுரிந்துள்ளனர்.
இதில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமானது தான். இந்த பந்தயத்தில் தான் ஒரேநேரத்தில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள். யார் ஒருவர் நிற்காமல், தொடர்ந்து, சீராக, வேகமுடன் செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டாலும் அதில் முதல் மூன்று பேருக்கு மட்டும் தான் பரிசு கிடைக்கும்.
இந்த போட்டியின் ஆரம்பத்தில் யார் யாரோ முந்திக்கொண்டு முதலில் கடந்து செல்வார்கள். அதேபோல் இடையில் வேறு ஒரு குரூப் முதலில் கடப்பார்கள். ஆனால் வெற்றி இலக்கு நெருங்க நெருங்க சம்பந்தமே இல்லாமல் கடைசியில் எங்கோ இருப்பவர் முதலில் வந்துகொண்டிருப்பார்கள். இந்த போட்டியில் முதலில் வருபவர்கள் தான் முதலில் வெற்றி இலக்கை அடைவார்கள் என்று கட்டாயமாகச் சொல்லமுடியாது. இடையில் சிலர் கடக்க முடியாமல் விலகிவிடுவார்கள். சிலர் மிகவும் கஷ்டப்பட்டு மெதுவாக கடப்பார்கள். இதற்கு காரணம் என்ன? இந்த போட்டி முழுவதிலும் யாருக்கு அதிக அளவில் 'ஸ்டாமினா ' அதாவது மூச்சு பலம் , முறையான பயிற்சியும், முயற்சி மற்றும் தன்னம்பிக்கை உள்ளவரே வெற்றி பெறுவார்.
இது போலத்தான் நமது வாழ்க்கை பந்தயம். இந்த பந்தயத்தில் வயது வித்தியாசம் இல்லாமல், பலவிதமான எண்ணங்கள், அறிவு, திறமையுள்ளவர்கள் , பயிற்சி பெற்றவர்கள், முயற்சி செய்துகொண்டிருப்பவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஆ...ஊ ... என்று கூச்சல் போட்டு வெற்றி அடைந்தவர்கள் சிறிது நாட்களில் காணமல் போய்விடுகின்றனர். ஒருசிலர் முன் வைத்த காலை பின் வாங்காமல் சீரான வேகத்துடன், கடின உழைப்புடன் , திறமையும், அறிவையும் வளர்த்துக் கொண்டு சிறந்த பயிற்சி பெற்று தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தங்களது குறிக்கோளை அடைகின்றனர்.
பலர் வாழ்கையில் சிறு சிறு பிரச்சனைகளைக் கூட எதிர் கொள்ள தாக்குபிடிக்க முடியாமல் ஒரு தடவை முயன்று தோற்க்கிறார்கள் . மேலும் அந்த தோல்வியே மனதில் வைத்துகொண்டு முயற்சி செய்யாமல் விட்டு விடுகின்றனர்.பெரும்பாலும் அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு குறைவால் தங்கள் வெற்றியை நழுவவிடுகின்றனர் என்று சொல்லலாம்.
முதல் வருடத்தில் பரபரப்பாக வியாபாரம் செய்தவர்கள், வெற்றிகண்டவர்கள் அடுத்த வருடத்தில் நஷ்டமடைந்து தோல்வி காணுகிறார்கள். தங்கள் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு மிகவும் போராட வேண்டும் என்கிற சித்தாந்தத்தை மறப்பதாலும் தங்களின் அலட்சிய போக்குகளாலும , கடந்த வெற்றியை நினைத்து கொண்டே இருந்ததாலும் அவர்களால் தொடர் வெற்றியை அடைய முடியாமல் தவிக்கிறார்கள்.
ஆக வெற்றிக்கு
தொடர் உழைப்பு,
தொடர் முயற்சி,
தொடர் பயிற்சி,
தொடர்ந்து திறற்றும் வளர்த்து கொள்ளுதல்
தொடர் தன்னம்பிக்கை ஆகியவைகள்
அவசியம் ! மிக அவசியம் !! மிக மிக அவசியம்!!!
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Very Good.
ReplyDelete