அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்
உங்களுடைய் வருமானம் பணக்காரனாக்குமா -
IS YOUR INCOME HELP YOU A RICH MAN ?
சராசரியாக எல்லோரும் நினைப்பார்கள், அதிகமாக சம்பளம் வாங்கும் அனைவருமே பணக்காரர்களாக இருப்பார்கள் என்று. அதேபோன்று நல்ல தொழில் செய்து சம்பாதிப்பவர்கள் பெரிய பணக்காரர்கள் தான் என்று. அவைகளெல்லாம் மேலோட்டமாக பார்க்கும்போது அப்படி எண்ணுவது உண்மை போலத் தோன்றும்.
ஆனால் உண்மை அதுவல்ல. நல்ல சம்பாத்தியம் பெறுகிறவர்கள் அதைவிட அதிகம் செலவழித்தால் அவர்கள் கடனாளியாய் மாறிவிடுவர்.
அதேபோல் தொழிலில் நல்ல வருமானம் உள்ளவர்கள் தேவையில்லாமல் முதலை முடக்கும்படி செலவு செய்தால் அவர் கூடிய விரைவில் ஆண்டியாகும் வாய்ப்பு அதிகம்.
அதாவது வரவுக்கு மேல் செலவு செய்தல் எப்பொழுதுமே கூடாது. உங்கள் சேமிப்பை பொறுத்து தான் நீங்கள் பணக்காரரா இல்லையா என்பது தெரியும்.
ஒன்றை வாழ்க்கை முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சேர்க்கும் பணமென்பது சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்கள் போல கொஞ்சம் கொஞ்சமாக அல்லது ஒவ்வொன்றாக வருபவர்கள் போன்றது. நீங்கள் திட்டமில்லாமல் இருந்தால் சினிமா முடிந்தவுடன் எல்லாரும் மொத்தமாக வெளியே செல்வது போன்று சேர்த்த செல்வம் முழுவதும் ஒரேயடியாய் போய்விடும்.
சோறு - என்பது அன்றைகன்று சாப்பிடுவது
அரிசி - குறுகியகால் தேவைக்கு உபயோகமாய் இருப்பது.
நெல் - என்பது உன் வருங்காலத்திற்கு வாழ்க்கை முழுவதிற்கும் தேவைபடுவது.
பணக்காரர் = சம்பாதிப்பு - சேமிப்பு - செலவு - கடன்
எல்லா நெல்லையும் அரிசியாகவோ பின் சோறாக்கி சாப்பிட்டு விடாதே.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Fantastic..
ReplyDelete