அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
அறிவும் அறிவின் வகைகளும்
WHAT IS AND TYPES OF KNOWLEDGE
அறிவு என்பதன் அர்த்தம் அறிதல் என்பது. அறியாத , தெரியாத ஒன்றை மற்றொன்றின் மூலமாக தெரிந்து கொள்வது அறிவு. அறிவு , உங்கள் மனதில் எண்ணங்களாக புதைந்து சிந்தனை மரமாக வளருவது. உழைப்பு மற்றும் முயற்ச்சியினால் அதில் இருக்கும் வெற்றிக்கனியை சுவைக்க வழி செய்வது.
ஆறுவகை அறிவு:
1. அறியாத அறிவு :
எதையுமே அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்யாதவர்கள். ஒருவகையில் அவர்கள் முட்டாள்களே.
2. பார்த்தறிவு :
சில சமயங்களில் பார்த்த நிகழ்சிகளைக் கொண்டு அறிவு பெறுவது.
3.கற்றறிவு :
சிலவற்றை நாம் புத்தகங்களின் மூலமாக, இன்டர்நெட் மூலமாக தெரிந்துகொள்வது.
4. கேட்டறிவு அல்லது சொல்லறிவு:
நாம் அதிகமாக அறிவு பெறுவது இந்த வகையில் தான்.
5. பட்டறிவு:
எதையுமே யாரையும் நம்பாமல் எல்லா காரித்தையும் தாமே செய்து அதன்மூலம் நல்லது கெட்டது பெறுவது. இதற்கு அனுபவ அறிவு என்றும் சொல்லலாம்.
6. பகுத்தறிவு:
எல்லா அறிவின் மூலமாக கிடைப்பதை அக்கு வேறு ஆணிவேராய் அலசி ஆராய்ந்து தெளிவான முடிவைப் பெறுவது.
ஆக நம்மைச் சுற்றிலும் பலவகையான அறிவுகள் பலரிடத்திலும் கிடைக்கும். அதில் நல்லவைகளை மட்டும் தெரிந்துகொண்டு வாழ்கையில் பின்பற்றி வந்தால் எந்நாளும் உங்களுக்கு இன்பனாளாகும்.
சுற்றிலும் கவனம் கொள்க!
நல்ல அறிவை பெருக!
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Good..
ReplyDelete