அனுபவ பொன் வரிகள்
மதுரை கங்காதரன்
உன் தலைக்கு அங்குசத்தின் குத்து தேவை -
NEED A SELF CONFIDENT PUNCH TO YOU
யாணைக்கு கோபம் (மதம் பிடித்தால்) வந்தால் எப்படி இருக்கும்? தன்னைச் சுற்றியுள்ளவர்களை உண்டு, இல்லை என்று ஆக்கிவிடும். அந்த சுபாவத்தினால் தான் அந்த காலத்தில் எதிரிகளை அழிப்பதற்கு தங்களுடைய படைகளில்
யாணைகளை அதிகமாக சேர்த்துக்கொண்டனர். அப்படிப்பட்ட பலசாலியான
யாணை எப்படி அப்பாவி சுபாவம் கொண்ட பாகனிடம் அடிபணிந்து கிடக்கின்றது.
பொதுவாக முன்பெல்லாம்
யாணையைப் பிடிப்பதற்கு பெரிய பள்ளம் தோண்டி அதன்மேல் அந்த பள்ளம் தெரியாதவாறு யாணைக்கு பிடித்த சருகு, இலை தளைகளை போட்டு மூடிவிடுவார்கள். வருகின்ற
யாணையோ இதை அறியாமல் அதன்மேல் கால் வைத்தவுடன் அந்த பள்ளத்திற்குள் விழுந்துவிடும். விழுந்த யாணை ஆவேசத்துடனும், அக்குரோஷத்துடன் அதிலிருந்து தப்பிப்பதற்காக முட்டும் மோதும்.
தன் பலம் உள்ளவரை மோதிய பின் விரைவில் சோர்ந்துவிடும். ஒருகட்டத்தில் தன்னால் எதுவும் முடியாது தன்னுடைய பலம் குறைத்துவிட்டது என்று எண்ணி அமைதியாகிவிடும். அமைதியான யாணை வெளியே வந்தபிறகு யாணைப் பாகன் சொன்னபடி நடக்கும். பிறகு எப்படி போரில் இந்த அமைதியான யானயை பயன்படுத்துகிறார்கள்? யாணை போரில் நுழைந்தவுடன் யாணை மேல் உட்கார்ந்து சவாரி செய்பவன் வைத்திருக்கும் கூமையான் அங்குசம் கொண்டு தலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குத்து குத்தியவுடன் மீண்டும் பழைய முழுவலிமையுடன் 'தன பலம் எங்கும் போய்விடவில்லை . என்னுடன் தான் இருக்கின்றது' என்று காட்டிவிடும்.
அதுபோல நமது எண்ணங்களும் அப்படித்தான். சில தோல்விகளின் அனுபவத்தால், வாழ்க்கை கஷ்டத்தினால், தீர்க்க முடியாத பிரச்சினைகளால் மனம் எந்த வேலையும் செய்யவிடாமல் சோர்வை கொடுக்கின்றது. 'தன்னிடமிருந்த பலம் குறைந்துவிட்டது. இனி என்ன முயற்சி செய்தாலும் பலன் இருக்காது' என்று முடிவுக்கு வநதுவிடும்.
அப்போது தான் சிறந்த தலைவரோ, நிர்வாகியோ, ஆலோசகரோ, குருவோ, ஆசானோ அவர்களின் தலையில் 'தன்னம்பிக்கை' என்னும் அங்குசத்தை குத்தி அவர்களுக்குள் இருக்கும் உழைப்பையும் திறமையும் வெளியே கொண்டுவரசெயவார்கள்.
அப்படி உனது எண்ணங்கள் சோர்வடையும்போது யாராவது 'அங்குசம் ' கொண்டு உன் தலையில் குத்துவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்காதே . விடா - முயற்சி, நம்பிக்கை கொண்டு உன்னை நீயே குத்திக்கொள். அதுதான் உன் திறமைகளை வெளியே கொண்டுவரும் வழி . அதுபோலத்தான் மாடு, குதிரை வேகமாக ஓடுவதற்கு 'தார்குச்சி' கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தில் குத்தி ஓடவைப்பார்கள்.
உங்கள் திறமை வெளியே கொடுவர 'அங்குசம்' போன்று தன்னம்பிக்கையை மூளையில் ஏற்றிக்கொள்ளுங்கள்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Good..
ReplyDelete