அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
திரைப்படம் , சீரியலுக்கு அடிமையானவர்களா-
ARE YOU AN ADDICT OF CINEMA OR TV SERIALS
திரைப்படம் மற்றும் சீரியல் இரண்டும் மனிதர்களை வைத்துக்கொண்டு மனித வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் காட்டி மக்களை பழக்கப்படுத்தி, பார்ப்பதை வழக்கமாக்கி அடிமை படுத்திவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். அவர்கள் மக்களை சோம்பேறியாக்க , மூளைய மழுங்க வைக்க போட்டி போட்டு கொண்டு இராப் பகலாக உழைத்து வருகின்றனர். இந்த இரண்டிலும் திட்டமிட்டபடி (கதைப்படி) முதலும் முடிவும் இருக்கும். அதில் நடிக்கும் பாத்திரங்கள் அனைத்தும் 'டைரக்டர்' என்ன எப்படி செய்யச் சொல்கிறாரோ அதன்படி தான் கதை நகரும்.
ஒரே நொடியில் மண் குடிசை மாளிகையாகிவிடும், பிறந்த குழந்தை இளைஞன் ஆவான். பெரிய பெரிய பிரச்சனைகள் இலகுவாக தீர்க்கப்படும், ஒரே வார்த்தையில் தவறை உணருவார்கள். தொண்டன் தலைவனாவான், முட்டாள் படிப்பில் கெட்டிக்காரனாவான்,ஏழை பணக்காரனாவான், வேலைக்காரன் முதலாளியாவான், சாதாரண பிரஜை முதலமைச்சராவான், 50 எதிரிகளை பந்தாடுவான், உண்மையில் கரகர குரல் இருப்பவன், பின்னணி குரல் கொடுத்து மேக் அப் செய்வார்கள். கவர்ச்சியைப் பற்றி சொல்லவே வேண்டாம். சில சமயங்களில் கஷ்டமான காட்சிகளில் பிறரைக் கொண்டு டூப் போட்டு நடிக்கவும் வைப்பார்கள். இப்போது அனிமேஷன் கொண்டு 'அட்ஜஸ்ட் ' செய்கிறார்கள்.நினைத்த நேரத்தில் மழை என்று கணக்கற்ற வகையில் மக்களை மயக்கி அது உண்மையென காட்டி நம்ப வைக்கிறார்கள்.
உண்மையில் வாழ்க்கை அப்படியா இருக்கின்றது. நாம் நினைப்பது ஓன்று! சம்பந்தமே இல்லாமல் நடப்பது இன்னொன்று! நம்மை சுற்றியிருக்கும் பாத்திரங்கள் எப்போதெல்லாம் மாறுவார்கள் என்று சொல்லவா முடிகிறது? நேற்று வரை சகோதரனாக இருந்தவன் இன்று அந்நியனாக மாறுகிறான்! நேற்று கூட்டு குடும்பம் இன்று தனிக்குடித்தனம், நேற்று நண்பன் இன்று எதிரி, நேற்று அன்பானவன் இன்று அரக்கனாகிறான், நேற்று நம்பிக்கையானவன் இன்று அவனம்ப்பிக்கைக்கு ஆளாகிறான், நேற்று நல்லவன் இன்று திருடனாகிறான்.
நம்மைச் சுற்றிலும் எளிதில் கணிக்கமுடியாத சதி வேலைகள், நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று பல உருவங்களில் நடமாடுகிறார்கள். '"அந்த பிரச்சனையா? நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றவர்கள் ஆபத்து வரும் சமயத்தில் பறந்து விடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
இன்னும் சிலர் ஆசை வார்த்தை பேசி நம்மை நம்ப வைத்து நட்ட நடுகாட்டில் விட்டு விட்டு அவர்கள் தப்பித்துவிடுவதை கேள்விபட்டியிருக்கிறோம். 'அய்யோ அய்யோ 'என்று கதறினாலும் விட்டு விட்டு செல்ல தயங்காதவர்கள் பலர் இருக்கத் தான் செய்கிறார்கள். நாம் உத்தமனாக இருந்தாலும் உன்னைச் சுற்று இருப்பவர்கள் அவ்வாறு வாழவிடாது! 'பொய் ' பேசச் சொல்லும், பொறாமை பட செய்யும், கோபம் வரவழைக்கும் !
நாம் நடை பாதையில் விழிப்பாக நடந்தாலும், குடித்து ஓட்டும் வாகனங்கள் நம்மை நோக்கி வந்தால் என்ன செய்வது? அன்புடன் நடந்து கொண்டாலும் உன்னிடத்தில் கடினமாக நடந்துகொள்வார்கள். நீ கட்டுப்பாட்டுடன் இருந்தால் துப்பாக்கி கொண்டு சுடவரும், கத்தியை காட்டி மிரட்டும், பொருட்களை அபகரிக்க நினைக்கும்!நீ சாந்தமாக , அமைதியாக , இனிமையாக பேசினாலும் காதில் கேட்கமுடியாத பதில் வரும். அப்போதெல்லாம் உன்னைக் காப்பாற்ற திரைப்படம் / சீரியலில் வருவது போல் கதாநாயகன் / கதாநாயகி வருவார்களா?
நீ துன்பப்பட்டாலும் துயரப்பட்டலும் உன்னை நீ தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். என்ன செய்வது நீ பார்த்தது திரைப்படம். நீ இருப்பது வாழ்க்கை படம் . அது நிழல் படம். நீ வாழ்வது உண்மை படம். அதில் யாருக்கும் பாதிப்பில்லை. அனால் வாழ்கையில் நீ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மற்றவர்களுக்கு பாதிப்பு உண்டு. நல்லதை செய்தால் நன்மை அடைவர். தீமை செய்தால் தீங்கு அனுபவிப்பர். ஆகவே உன்னை நீ நம்பு! சத்தியத்தை கடைபிடி! கை மேல் பலன் கிடைக்கும். அப்படி நடந்துகொல்வீர்களானால் வாழ்கையில் நீங்கள் கட்டாயம் கதாநாயகன் அல்லது கதாநாயகி தான்.
ஆகவே
பிறர் நிழலை நீ நம்பாதே!
உன் நிஜ உருவத்தை நம்பு !
கட்டாயம் நீ வாழ்கையில் முன்னேறுவாய்!
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
Very Good.
ReplyDelete