அனுபவ பொன்வரிகள்
மதுரை கங்காதரன்
நீங்கள் சூழ்நிலையை மாற்றுபவர்களா?
சூழ்நிலைக்கு மாறுவீர்களா-
ARE YOU ABLE TO CHANGE OR ACCEPT
THE SURROUNDING
நமது எண்ணங்களை விட சூழ்நிலையின் ஆதிக்கம் தான் நம்மை பாதிக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.. அதை நீங்கள் கீழ் காணும் உதாரணங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
* கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் கூடும்போது ஒவ்வொருவரும் அண்மையில் நடைபெற்ற அல்லது நடைபெறும் கிரிக்கெட் போட்டி பற்றிய பலவித சுவாரஷ்யமான தகவல்களையும், சில வீரர்களின் பயோ டேட்டா வையும், பிடித்த வீரரின் சாதனைகளையும், அவர் அடிக்கும் ஸ்டைலையும் விலாவாரியாக பேசுவார்கள். அதில் கலந்து கொள்ளும் மற்றவர்களும் அந்த விளையாட்டைப் பற்றித்தான் பேசுவார்கள். அதாவது அங்கே கிரிக்கெட் விளையாட்டு பற்றிய சூழ்நிலை இருப்பதால் அனைவரும் அந்த சூழ்நிலைக்கு மாறிவிடுகின்றனர்.
* திருமண விழாவில் அவரவர்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களின் நடைபெற்ற அல்லது நடைபெறும் திருமணங்களையும், அதன் மலரும் நினைவுகளையும், மறக்கமுடியாத சம்பவங்களையும் பேசி மகிழ்வார்கள். கிட்டத்தட்ட அனைவருமே அதைப்பற்றி தான் பேசுவார்கள்.
* வேறு வேறு கல்லூரியில் படிக்கும் பழைய நண்பர்கள் தங்கள் கல்லூரியில் நடந்த கேலிக் கூத்துகள், பந்தாக்கள், அலப்பரைகள், கட்டடித்த வகுப்புகள், சேஷ்டைகள், காலேஜ் கட்டடிடுத்து சென்ற சினிமாக்கள், தங்களுடைய புதிய நண்பர்கள் / நண்பிகள் , தோழர்கள் / தோழிகளைப் பற்றிய பேசுக்கள் இருக்கும்.
* ஆஸ்பத்திரியில் பார்க்கும்போது அவர்கள் கேட்ட , பார்த்த நோயாளிகள், அவர்கள் பட்ட கஷ்டங்கள், எடுத்த மருத்துவ சிகிச்சைகள், விபத்துகள், மரணங்கள், மருத்துவ அறிக்கைகளைப் பற்றித் தான் பேசுவார்கள்.
* இதேபோல் மொபைல் போன் பிரியர்கள், மோட்டார் பைக் விரும்புகிறவர்கள், சினிமா, சீரியல் பைத்தியங்கள், புத்தக பிரியர்கள், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள், கோவில் குளம் சுற்றுகிறவர்கள், குழந்தைகள், வியாபாரிகள், ஆசிரியர்கள், அலுவலக வேலை பார்ப்பவர்கள், முகவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் இவர்களெல்லாம் கூட்டம் கூடி பேசும்போது அந்த சூழ்நிலைக்கு தகுந்தாற்ப் போல் மாறிக் கொள்வார்கள்.
மேற்கூறியவற்றில் அதிசயம் ஏதுமில்லை. ஒன்றை மட்டும் நாம் கவனிக்க வேண்டும். வேறு வேறு சூழ்நிலை நாம் எதிர்கொள்ளும்போது நம்முடைய எண்ணங்கள் நிலையாக இருக்கின்றதா? என்பதை உறுதிகொள்ளவேண்டும். ஏனென்றால் எந்த ஒரு நிலையிலும் நீங்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்ப் உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது. அப்படி மாற்றிக்கொண்டால் நீங்கள் நினைக்கும் குறிக்கோளை அடைய முடியாது.
நான்கைந்து நண்பர்கள் மிகவும் அக்கறையாக அவர்களுடைய எதிகால படிப்புகளை விவாதித்து கொண்டனர். அதற்கான குறிக்கோளையும், திட்டத்தையும் தீட்டினார்கள். வாரம் தவறாமல் அதன் முன்னேற்றத்தை பேச வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.
அடுத்தவாரம் கூடினார்கள். ஒருவன் தான் படித்த பாடத்தையும் , தெரிந்து கொண்ட பல செய்திகளை பேசினான். ஒருவன் தான் பார்த்த படத்தைப் பற்றி விரிவாக பேசினான். மற்றுமொருவன் தான் சென்று வந்த ஊரைப் பற்றிப் பேசினான். வேறொருவனோ தான் புதிதாக வாங்கிய மொபைல் போனைப் பேசினான். கடைசியில் ஒருவன் தான் பார்த்த 'கிரிக்கெட் மேட்ச் ' பற்றியும் , தான் விளையாடிய விளையாட்டு பற்றி பேசினான்.
அதாவது சென்ற வாரம் வரை அவைகளுடைய குறிக்கோள் என்னவாக இருந்தது. இந்த வாரம் என்னவாயிற்று? இந்த ஒரு வாரத்தில் அவரவர்கள் சந்தித்த சூழ்நிலைகள் என்னென்னவென்று அவர்கள் பேசிய பேச்சிலிருந்து நமக்கு தெளிவாக தெரிகின்றது. அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகள் தான் அவர்களுடைய எண்ணத்தை மாற்றிவிட்டது என்று சொல்லலாம்.
ஆக, உங்கள் எண்ணங்கள் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் உங்கள் சூழ்நிலையும் உங்கள் எண்ணத்தை ஒத்து செயல்கள் செய்பவர்களாக சூழ்ந்து இருந்தால் உங்கள் குறிக்கோள் எளிதில் நிறைவேறும்.
எண்ணங்கள் என்ற சூரியன் அல்லது சந்திரன் எவ்வளவு பெரிதாக பிரகாசமாக இருந்தாலும் மிகவும் சாதாரணமான சிறிய மேகங்கள் அதை மறைத்துவிடும். சூழ்நிலை மேகத்தை உனது சாதகமாக்கிக்கொள்.
உதாரணமாக, தியேட்டரில் திரைப்படம் ஓடுகின்றது. காட்சிக்குத் தகுந்தாற்ப் போல் அந்த படத்தை பார்க்கும் அனைவரும் சிரிக்கின்றனர், உணர்ச்சிவசப் படுகின்றனர். அழுகின்றனர், மகிழ்கின்றனர், ரசிக்கின்றனர்.
சிறந்த தலைவர்களின் ஆற்றல் மிக்க பேச்சு கேட்பவர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றது. இனிமையான பாடல்கள் ரசிக்க வைக்கின்றது. சாந்தமான ஆன்மிக சொற்ப்பொழிவுகள் மக்களை பக்தியில் மூழ்கச் செய்துவிடுகின்றது. ஒரு நடிகனின் பேச்சு பலரையும் கவருகின்றது. அதாவது இவர்களெல்லாம் தங்களுக்கு தகுந்தாற்போல் சூழ்நிலைகளை மாற்றும் வல்லமை பெற்றவர்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப தங்கள் சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வதால் அவர்கள் புகழ் எப்போதும் உச்சத்தில் இருக்கும்.
ஆகவே தான் பள்ளியில் நன்றாக படிப்பவர்கள் தனியாகவும், விளையாடுபவர்கள் , நடனமாடுகின்றவர்கள், பாடுபவர்கள், பேசுபவர்கள், நடிப்பவர்கள் என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரித்து தினமும் அவர்களை கூட வைத்து அவரவர்களுடைய எண்ணங்களை நிலைநிறுத்திக் கொள்ளச்செய்வார்கள்.
ஆகவே எந்த சூழ்நிலையிலும் உங்கள் எண்ணங்கள் மாறாமல் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நினைக்கும் குறிக்கோளை அடையுங்கள்.
எவ்வாறு ஆழ்நிலை தியானத்தில் இருப்பவர்கள் தங்கள் சூழ்நிலைகளை மறந்து ஆழ்ந்து இருப்பது போல் எண்ணத்தில் ஆழ்ந்து இருங்கள். உங்கள் செயல் வெற்றி இலக்கை எளிதில் அடைய வழி வகை செய்யும்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
No comments:
Post a Comment