Pages

Friday 21 September 2012

நீங்கள் சாதாரணமான கரியா? அல்லது பிரகாசிக்கும் வைரமா? ARE YOU A CHARCOAL OR DIAMOND

அனுபவ பொன் வரிகள் 

மதுரை கங்காதரன் 

நீங்கள் சாதாரணமான கரியா? அல்லது பிரகாசிக்கும் வைரமா?
ARE YOU A CHARCOAL OR DIAMOND 

மனிதனை கரிக்கு (அடுப்பு எரிக்கும்) ஒப்பிடலாம். இரண்டும் எரிந்த பிறகு மீதம் இருப்பது சாம்பல் மட்டுமே . அதேபோல் கரியை தொடர்ந்து காற்று புகாதவாறு பலவித அழுத்தங்களுக்கு உட்படுத்தினால் வைரக்கற்களாக மாறிவிடுகின்றது. அதை பட்டை தீட்டி மெருகு ஊட்ட மெருகு ஊட்ட பளிச்சென்று பல வண்ணங்களுடன் பிரகாசிக்கும் வைரமாக ஒளி வீசிம்  அதிசயத்தை நான் பார்த்திருக்கிறோம்.   


அதுபோல சாதாரண மனிதன் தன்னுடைய தொடர் முயற்சி, கடின உழைப்பு , கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பின்பற்றும் போது  அவன் தன்னம்பிக்கை கொண்ட மனிதனாக மாறிவிடுகின்றான். மேலும் அவனது ஆற்றலையும், திறமையையும் அறிவைக்கொண்டு மூளையை தீட்ட தீட்ட 'வெற்றி மனிதனாக ' ஜொலிக்க ஆரம்பிக்கிறான்.


வைரம்  எப்போதும்  தான் ஒரு சாதாரண கரியாகவே நினைக்கும். அதன் மதிப்பு அதற்கு தெரியாது. ஆனால் மற்றவர்களுக்கு அது ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷமாகத்  தெரியும். 


அதுபோல வெற்றி பெற்ற எந்த ஒரு மனிதனும் எத்தகைய பெரிய வெற்றி பெற்றாலும் அதன் பெருமை அவனுக்குத் தெரியாது. எப்போதும் போல் அமைதியும் சாந்தமாகவே இருப்பான். ஏனென்றால் அவன் எப்போதும் தான் ஒரு சாதாரண மனிதாகவே நினைத்துக்கொள்வான் . ஆனால் அவனைச்சுற்றி இருப்பவர்களுக்குத் தான் அவனின் பெருமையும் திறமையும் தெரிந்து கொண்டு அவனை பாராட்டி பேசுவார்கள். வெற்றி மனிதனின் மதிப்பு , அவனை விட மற்றவர்களுக்குத் தான் அதிகம் தெரியும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் முயற்சி செய்து தோற்றவர்கள்.

கரியை வெப்பபடுத்தினால் கறுப்பு நீங்கி சிவப்பாக ஒளி  தரும். அதே போல் மனிதனின் முயற்சி அவனை வெற்றி மனிதனாக மாற்றிவிடுகின்றது . சூடு பெறாத கரி எப்போதும் மங்கிதான் இருக்கும். முயற்சி இல்லாதவன் திறமை எப்போதும் மங்கித்தான் இருக்கும்.

      

ஒருநாள் கரிக்கட்டைகள் எல்லாம் கூடி தன்னுடைய தலைவனை தேந்தெடுக்க கூடினார்கள். அப்போது சம்பந்தமே இல்லாத 'வைரம்' ஒன்றும் அவர்களுடன் சேர்ந்திருந்தது. அதனை சுற்றியிருந்தவர்கள் "இது கரிகட்டைகளின் கூட்டம் . இங்கு உனக்கு இடமில்லை " என்று அந்த வைரத்தை விரட்டிகொண்டிருந்தார்கள். ஆனால் அதுவோ  "ஐயா, நானும் கரிகட்டை தான்" என்று மன்றாடியது. அப்போது அங்கு விவரம் தெரிந்த ஒரு கரிக்கட்டை அந்த கூட்டத்தைப் பார்த்து  , "கரிக்கட்டைகளே, நாங்கள் இங்கு கூடியிருப்பது எதற்கு என்றால் ... நாம் எப்படி வைரமாக் ஜொலிப்பது என்று தான். அதாவது இதைப்போல.. என்று அந்த வைரத்தைப் பார்த்துச் சொன்னார். இதுவும் இதற்கு முன் நம்மைப் போல ஒரு கரிக்கட்டையாகத் தான் இருந்தது   " என்று சொல்ல அனைவரும் ஆச்சரியமாக அதனைப் பார்த்தனர் . அவரே," இன்று நம் அதிர்ஷ்டம் . இப்படிப்பட்ட வைரம் நமக்கு உதாரணமாகக் கிடைத்திருப்பது ! இந்த வைரத்தையே நம்முடைய தலைவனாக்கி , அதன் வழியில்  பின்பற்றி நாம் எல்லோரும்  இந்த சாதாரண கரிக்கட்டையிலிருந்து வைரமாக மாற முயற்சிப்போம் " என்று கூறியது.

இது தான் மனித வாழ்கையின்  கொள்கை. அழுத்ததிற்கு உட்பட்ட கரியானது ஜொலிக்கும்  வைரமாக மாறுவது போல மனிதனே! நீயும் முயற்சி, உழைப்பு கொண்டு அனைவரும் போற்றும் வெற்றி மனிதனாக மாறமுடியும். உன்னால் அது முடியும். 

நீங்கள் சாதாரண கரிக்கட்டைகள் அல்ல!


எப்போதும் உறுதியாக ஒளிவீசும் வைரக்கல் !

இடைவிடாது உழையுங்கள்!

முயற்சியை கைவிடாதீர்கள்!


பிறகென்ன நீங்கள் ஒரு வெற்றி மனிதர் தான்! 

                               இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

1 comment:

  1. Pls provide english equivalent for your tamil posting or translation atleast!! I will translate your posts and read it for sure.

    ReplyDelete